பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது கட்சியினை மகன் அன்புமணியிடம் ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அக்கட்சியில் பெரும் புயல் வீசி வருகிறது. இதனால் ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலர் மீண்டும் அன்புமணி பக்கம் சென்றுள்ள நிலையில், அதிருப்தியில் இருந்த சிலர் மாற்று கட்சிகளைத் தேடி நகரத் தொடங்கியுள்ளனர். இந்த அரசியல் மாற்றத்தின் தொடர்ச்சியாக, ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி மற்றும் பேரன் முகுந்தன் ஆகியோர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இருவரும் புதுச்சேரியின் ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமகவின் தலைமை மாற்றமும் உட்கட்சிப் பூசல்களுமே இத்தகைய முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தையல்நாயகி ராமதாஸின் மறைவுக்குப் பிறகு குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் நகர்வுகள், பாமகவினர் மற்றும் புதுச்சேரி அரசியல் களத்தில் கடுமையான விவாதங்களையும் அதிர்வலைகளையும் உருவாக்கியுள்ளன.
ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு…
அஜ்மீர் ரயில் நிலையத்தில் பரேலிக்குச் செல்வதற்காக ஓடும் ரயிலில் ஏற முயன்ற 39 வயதுடைய ரேஷ்மா என்ற பெண் கால்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…
கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவிய 36 வயது கட்டிடத் தொழிலாளி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்…
காட்டுப் பகுதிக்கு 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…