பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸ்க்கு எதிராகத் தொடர்ந்த சின்னம் தொடர்பான வழக்கைத் திரும்பப் பெற்றுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி ராமதாஸ்க்கு ‘மாம்பழம்’ சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்தும், அந்தச் சின்னத்தை முடக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டமாகப் பார்க்கப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஒரே விவகாரத்திற்காக இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களை அணுகுவது முறையற்றது என்றும், இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இதற்காக அபராதம் விதிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் ராமதாஸ் தரப்பிற்கு எச்சரிக்கை விடுத்தது.
நீதிமன்றத்தின் இந்த கடுமையான நிலைப்பாட்டைத் தொடர்ந்து, ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் இந்த மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகித் தீர்வு காணத் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் விளக்கம் அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்னதாக, தந்தை சொல்லுக்கு மகன் கட்டுப்படுவதில்லையா என்று நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, “தந்தையின் சொல்லை மகன் கேட்பதில்லை” என்று ராமதாஸ் தரப்பில் கசப்பான பதில் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தற்போது ராமதாஸ் தனது மகனுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி பின்வாங்கியுள்ளது தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…