திருமா சொன்ன ‘நோ’.. ரூட்டை மாற்றிய தைலாபுரம்…. தவெக-வுடன் ரகசிய டீல்?- பரபரக்கும் பாமக….!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், டாக்டர் ராமதாஸ் தலைமையிலான அணி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்  கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள், ராமதாஸ் தரப்பு தவெக-வுடன் கூட்டணி குறித்துப் பேசி வருவதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு அணிகளாகப் பிரிந்துள்ள நிலையில், இந்த நகர்வு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, ராமதாஸ் தரப்பு திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்காக அமைச்சர் எ.வ.வேலு மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரிகிறது. பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்ததால், திமுக தலைமை ராமதாஸ் அணியினரைச் சேர்க்க முன்வரவில்லை. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக ராமதாஸ் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்தச் சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு மாற்றாகத் தமிழகத்தில் ஒரு ‘மூன்றாவது அணி’ உருவாகும் வாய்ப்புகள் தென்படுகின்றன. இது குறித்துப் பேசிய எம்.எல்.ஏ அருள், தேர்தல் காலங்களில் பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பான ஒன்றுதான் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய்யை இளைஞர்கள் தேனீக்கள் போலச் சூழ்ந்துள்ளதாகவும், அரசியல் களத்தில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் அணி விஜய்யுடன் கைகோர்ப்பது வட தமிழக வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமகவுக்காக முன்னர் பணியாற்றிய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மூலமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்தக் கூட்டணி உறுதியானால், அது வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகளுக்கும் சவாலாக அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

5 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

6 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago