தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே நிலவி வரும் தொகுதிப் பங்கீடு குறித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்களைச் சந்திக்க உள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை அவர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இரு கட்சிகளின் நிர்வாகிகளிடையே சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் கடுமையான வார்த்தை மோதல்கள் அரங்கேறின. குறிப்பாக, ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கோரி காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த மோதல்கள் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவிய சூழலில், கனிமொழியின் இந்த டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி சுமார் 36 முதல் 38 இடங்கள் வரை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், திமுக தரப்பில் 20 முதல் 25 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கடந்த தேர்தல்களில் காங்கிரஸின் வெற்றி விகிதத்தைக் கணக்கில் கொண்டு, ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகள் என்ற விகிதாசார அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முடிக்க திமுக தலைமை விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உயர்மட்டச் சந்திப்பின் மூலம் கூட்டணியில் நிலவும் கசப்புணர்வுகள் நீக்கப்பட்டு, தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில், திமுகவும் விரைவில் தனது கூட்டணி விவகாரங்களை இறுதி செய்து தேர்தல் களத்தில் முழுவீச்சில் இறங்கத் தயாராகி வருகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…