“முடிவு பண்ணிட்டேன், ரகசியத்தை உடைத்த ஐயா”… தைலாபுரத்தில் ராமதாஸ் போட்ட அதிரடி ‘ஸ்கெட்ச்’… அன்புமணி தலையில் இறங்கிய பேரிடி….!

Spread the love

பாமக  நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தைலாபுரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் உரையாற்றும்போது அதிரடியான கருத்துகளை முன்வைத்துள்ளார். அன்புமணி ராமதாஸை அரசியலிலிருந்து அடியோடு ஒழித்துக் கட்டுவதற்காக ஒரு கும்பல் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக அவர் மறைமுகமாகச் சாடினார். குறிப்பாக, பொய் பேசுவதையே முழுநேர அரசியலாகக் கொண்ட ஒரு கூட்டத்தைக் கட்சியிலிருந்து அடியோடு நீக்கிவிட்டதாகவும், அவர்கள் நீதிமன்றத்தையே ஏமாற்றும் துணிச்சலைக் கொண்டவர்கள் என்றும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். கட்சிக்கு விரோதமாகச் செயல்படுபவர்களை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்ற எச்சரிக்கையும் அவரது பேச்சில் தொனித்தது.

இதற்கிடையில், வரவிருக்கும் தேர்தலுக்கான பாமகவின் நிலைப்பாடு குறித்த முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போகிறது என்பது குறித்த இறுதி முடிவை, அடுத்த வாரம் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தார். தமிழக அரசியலில் பாமகவின் கூட்டணி யாருடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், ராமதாஸின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் உன்னிப்பான கவனிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

2 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

2 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

3 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

3 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

4 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago