“உனக்கு நான் தான்டா எமன்”… அன்புமணியை காலி செய்ய ராமதாஸ் போட்ட ஸ்கெட்ச்…. பாமகவில் வெடித்த ‘அப்பா – மகன்’ யுத்தம்….!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய உட்கட்சிப் பூசலைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ‘ஈகோ’ மோதல், தற்போது வெளிப்படையான அரசியல் பிளவாக உருவெடுத்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இருவரும் இருவேறு துருவங்களாகச் செயல்படும் சூழல் உருவாகியுள்ளதால், பாமகவின் வாக்கு வங்கி சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அன்புமணி ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டி வருகிறார். அதேசமயம், டாக்டர் ராமதாஸ் தரப்பு முதலில் திமுக கூட்டணியில் இணைய முயன்றது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எதிர்ப்பு காரணமாக அது கைகூடவில்லை. பின்னர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்க எடுத்த முயற்சியும் தோல்வியடைந்த நிலையில், தற்போது சுமார் 30 தொகுதிகளில் டாக்டர் ராமதாஸ் தரப்பு தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த அதிரடி முடிவின் பின்னணியில், தன்னிச்சையாக முடிவெடுக்கும் மகனுக்கு அரசியல் ரீதியாகப் பாடம் புகட்ட வேண்டும் என்ற பழிவாங்கும் நோக்கம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிறுத்தி, வன்னியர் சமூக வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் அன்புமணியின் வெற்றியைத் தடுப்பதே ராமதாஸின் தற்போதைய ஒற்றை இலக்காக இருப்பதாக தைலாபுரம் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்தப் பகையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள திமுக காய்களை நகர்த்தி வருகிறது. ராமதாஸ் தனித்துப் போட்டியிடுவது அன்புமணியின் வாக்குகளைப் பிரித்து எதிர்க்கணிணியைப் பலவீனப்படுத்தும் என்பதால், ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு திமுக மறைமுகமாக உதவக்கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கைச் சிதைக்கும் இந்த ‘மாஸ்டர் பிளான்’, அக்கட்சியின் எதிர்காலத்தை என்னவாக்கும் என்பதைத் தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.

Nanthini

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

17 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

20 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

29 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

30 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

45 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

51 minutes ago