தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் பாமகவில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தந்தைக்கு மகனுக்கும் ஏற்பட்ட தலைமை போட்டியால் பாமக தற்போது இரண்டாக பிரிந்து கிடக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும் இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடுநிலையில் இருக்கும் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். இந்த சண்டை தற்போது உச்சத்தை எட்டிய நிலையில் இருவரும் மாறி மாறி அவர்களை எதிர்ப்பவர்களை கட்சியிலிருந்து தொடர்ந்து நீக்கி வந்தனர்.
இப்படியான நிலையில் கட்சியை நிறுவனர் ராமதாஸ் இனி அன்புமணிக்கு கட்சியில் இடம் இல்லை, வேண்டுமென்றால் தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும் என்று கூறி பரப்பரப்பை கிளப்பு இருந்தார். இதனால் அன்புமணி தனிக்கட்சி தொடங்குவார் என்ற சந்தேகம் இருந்த நிலையில் தற்போது அது ராமதாசுக்கே யூட்டர்ன் அடித்துள்ளது. கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்காத ராமதாஸ் இதனை சட்டரீதியாக எதிர்கொள்வதாக கூறியிருந்தார்.
இந்தப் பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்வதால் தேர்தல் சமயத்தில் கட்சியை, தேர்தல் ஆணைய முடக்கி விட்டால் சிரமம் ஏற்படும் என்று உணர்ந்த ராமதாஸ் “ஐயா பாமக”என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கப் போகிறார் என்ற தகவல் பரவி வருகின்றது. இதற்காக சுமார் 100 பேரிடம் பிரமாணம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. ராமதாஸின் இந்த அதிரடி முடிவு அன்புமணிக்கு பாதகத்தை தான் ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…