Categories: சினிமா

கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என்று சொன்ன ராஜ்கிரண்… எதனால் தெரியுமா…?

Spread the love

ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். கீழக்கரையில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ராஜ்கிரன் அவர்களின் இயற்பெயர் முகைதீன் அப்துல் காதர் என்பதாகும். சினிமாவில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர் ராஜ்கிரன். நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலு அவர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியதும் ராஜ்கிரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1991 ஆம் ஆண்டு தனுஷ் அவர்களின் தந்தையான கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே திரைப்படத்தை ராஜ்கிரன் தயாரித்து அதில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த திரைப்படம் வெற்றி பெற்று வெள்ளிவிழா கண்டது. மேலும் தனது நடிப்பிற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருதினை வென்றார் ராஜ்கிரன்.

தொடர்ந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய படங்களை இயக்கி தயாரித்து நாயகனாகவும் நடித்து புகழ்பெற்றார் ராஜ்கிரன். தமிழ் சினிமாவில் முதலில் அதிக சம்பளமாக ஒரு கோடி ரூபாய் வாங்கியது ராஜ்கிரன் அவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு பல முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்தார் ராஜ்கிரண். பாண்டவர் பூமி, சண்டக்கோழி, சண்டக்கோழி 2, வேங்கை ஆகிய திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ராஜ்கிரன். தனது நடிப்பிற்காக ஒரு ஃபிலிம்பேர் விருது 4 தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார் ராஜ்கிரண்.

இயல்பிலேயே மிகவும் நல்ல குணத்தையும் பிறருக்கு உதவும் குணத்தையும் கொண்டவர் ராஜ்கிரன். அப்படி ஒரு பிரபல வேட்டி நிறுவனம் ராஜ்கிரனை விளம்பரத்தில் நடிப்பதற்காக அணுகியது. அதற்காக கோடி ரூபாய்க்கு மேல் தருவதாகவும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஒரே வார்த்தையில் ராஜ்கிரண் அந்த விளம்பரத்தில் நடிக்காமல் மறுத்துவிட்டார்.

அதற்குக் காரணமாக அவர் கூறியது என்னவென்றால், ஒரு விளம்பரத்தில் நடிக்க வைக்க நீங்க எனக்கு இத்தனை கோடி ரூபா தரேன்னு சொல்றீங்க. வேட்டி சாதாரண மக்கள் உடுத்துற ஒரு துணி. நான் இந்த விளம்பரத்துல இவ்வளவு கோடி ரூபாய் வாங்கி நடிச்சு கொடுத்துட்டேன் அப்படினா எனக்கு கொடுக்கிற சம்பளம் எல்லாத்தையும் நீங்க வேஷ்டியில் தானே விலையை ஏற்றி வைப்பீங்க அப்போ சாதாரண மக்கள் எப்படி வந்து அந்த துணியை வாங்கி உடுத்த முடியும் என்று சொல்லி அந்த விளம்பரத்தில் நடிக்காமல் மறுத்து விட்டாராம் ராஜ்கிரன்.

admin

Recent Posts

மகிழ்ச்சி விபரீதமான நொடி… கடலில் விழுந்த சுற்றுலாப் பயணி…! கழுத்தை இறுக்கிய பாராசூட் கயிறு பதறவைக்கும் வீடியோ…!

கோவா கடற்கரைக்குச் சுற்றுலா சென்ற பெண் ஒருவர், கடலில் பாராசெயிலிங் சாகசத்தில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக பாராசூட்டின் கயிறு அறுந்து…

6 minutes ago

“கிளைமாக்ஸ் நெருங்கிடுச்சு!.. 2 நாள் டைம்… விஜய்க்கு ஆளுநர் விதித்த கிடுக்கிப்பிடி கெடு… கிண்டியில் நடந்த பரபரப்பு சந்திப்பு”…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி…

6 minutes ago

3 வருஷமாச்சு… என் ₹1.44 லட்சத்தைக் கொடுங்க..! ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வீடியோவில் கதறவிட்ட முன்னாள் பணிப்பெண்…!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் விமானப் பணிப்பெண் ஒருவர், தனக்கு வழங்கப்பட வேண்டிய ₹1.44 லட்சம் நிலுவைத் தொகையை  அந்த நிறுவனம்…

10 minutes ago

திமுகவுக்கு ‘நிம்மதி’… விஜய்க்கு ‘ஆப்பு’?… “அந்த சீட்டை ராஜினாமா செய்யுமா காங்கிரஸ்”…. கடைசில இப்படி ஆகிடுச்சே….!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…

1 மணத்தியாலம் ago

“குடுத்து வச்சவங்க நீங்க” ஸ்கூட்டர் வாங்கப்போவதாகக் கூறி மகன் செய்த் செயல்… மகனின் சர்ப்ரைஸால் ஆனந்தக் கண்ணீரில் நனைந்த பெற்றோர்..!!

தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…

1 மணத்தியாலம் ago

“தளபதி 2.0.. ஒரே நேரத்தில்.. பல சேனல்களை ஆக்டிவேட் செய்த விஜய்”… இது வெறும் ஆரம்பம் தான்… தமிழக அரசியலில் ஒரு ‘டிஜிட்டல்’ புரட்சி….!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…

1 மணத்தியாலம் ago