“ரஜினி கொடுத்த அந்த ஒரு தங்கச் சங்கிலி… கடைசி வரை கழட்டாத தேவா”…. கலங்க வைக்கும் அந்த ஒரு சுவாரஸ்ய தகவல்…!

Spread the love

தமிழ் திரைப்பட இசையுலகின் ‘தேனிசைத் தென்றல்’ என்று போற்றப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவா காலமான செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1980 மற்றும் 1990-களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜாம்பவான்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலகட்டத்தில், தனது தனித்துவமான கானா பாடல்களாலும் துள்ளலான இசையாலும் தமிழ் இளைஞர்களைக் கவர்ந்தவர் தேவா. ‘வைகாசி பிறந்தாச்சு’ படத்தின் மூலம் வெற்றியின் முகத்தைக் கண்ட இவர், ஒரே ஆண்டில் 36 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த ‘அண்ணாமலை’ படத்தின் மாபெரும் வெற்றி தேவாவின் இசைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற “ஒரு பெண் புறா” பாடல் ரஜினிக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியதுடன், அதைத் தொடர்ந்து ரஜினிக்காக ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தார். அண்ணாமலை படத்தின் வெற்றி விழாவின் போது, ரஜினிகாந்த் தனது கையால் ராகவேந்திரர் டாலர் பதித்த தங்க சங்கிலியைத் தேவாவுக்குப் பரிசாக வழங்கினார்; தன் வாழ்நாள் முழுவதும் இந்தச் சங்கிலியைப் பெருமையுடன் அணிந்திருப்பதை தேவா அடிக்கடி கூறி மகிழ்ந்தவர்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்த தேவாவை, மருத்துவராகிய அவரது மகள் சிபிஆர் சிகிச்சை அளித்து வடபழனி சூர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி காலை 11 மணி அளவில் தேவா காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்ததும், திநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த தேவாவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் இடப்பட்டு, எப்போதும் அவர் கையில் வைத்திருக்கும் வெள்ளை கைக்குட்டியும், ரஜினிகாந்த் பரிசாக அளித்த அந்தத் தங்க சங்கிலியும் அவரது உடலுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, தேவாவின் உடல் அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

8 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

9 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

9 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

9 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

9 மணத்தியாலங்கள் ago