#image_title
ரஜினி இப்போது மிகப்பெரிய இடத்தில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் தமிழ் சினிமாவில் அசத்திக்கொண்டு இருக்கிறார். 73 வயதிலும் அவர்தான் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால் இதே 1973- 74ம் ஆண்டுகளில், ரஜினிகாந்த் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த காலகட்டத்தில் பீஸ் கட்ட கூட போதிய பணமின்றி சிரமப்பட்ட இருக்கிறார். ராயபேட்டையில் தனது நண்பர் விட்டல் அறையில் தங்கியிருக்கிறார். அப்போது அங்குள்ள டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு நண்பர்களுடன் சாப்பிடச் செல்வது ரஜினியின் வழக்கம். பெரும்பாலும் கையில் காசு இல்லாத சூழலில் வாழ்ந்த ரஜினியிடம் ஓட்டலில் சாப்பிடவும் போதிய கையிருப்பு இருக்காது.
ஆனால் அந்த ஓட்டலுக்கு சென்றால் அங்கிருந்த வயது முதிர்ந்த சர்வர் நாராண ராவ், வந்துட்டாங்கப்பா தமிழ் சினிமா ஸ்டார் நடிகர்கள் என கிண்டலாக வரவேற்று அவர்களுக்கு டிபன், உணவு வகைகளை பரிமாறுவார். ரஜினி உள்ளிட்ட அவரது நண்பர்கள், அந்த சர்வரை அப்பா என்றுதான் அழைப்பது வழக்கம். ஒருமுறை ரஜினி, விட்டல் இருவரும் சாப்பிட சென்றபோது 4 இட்லிக்கு மட்டுமே கையில் காசு இருந்துள்ளது. அதனால் விட்டல் மட்டும் சாப்பிடட்டும் எனக்கு ஒன்றும் வேண்டாம், பசியில்லை என்று ரஜினி சர்வரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அதை ஏற்காத நாராயண ராவ் என்ன வேணுமோ, வேண்டியதை எல்லாம் வாங்கி சாப்பிடுங்க, என்று கூறிவிட்டு பில் தராமல், பணம் கேட்காமல் அவர்களை பலமுறை அப்படி அனுப்பி இருக்கிறார்.
அந்த ஓட்டலில் ஒரு வழக்கமுண்டு. ஓட்டலில் பணிபுரியும் சர்வர்களுக்கு வேண்டியவர்கள் வந்தால், என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். பில் தர வேண்டியதில்லை. ஆனால் கடைசியில் அவர்கள் சாப்பிடதற்கான பில், அந்த சர்வரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பதுதான் அது. ஒரு கட்டத்தில் ரஜினி பெரிய நடிகராக வளர்ந்துவிட்டார். மூன்று முடிச்சு, மூன்று முகம் என நடித்துக்கொண்டு இருக்கிறார். ஒருமுறை அவர் கண் கலங்கி வருந்துகிறார்.
அவரது நண்பர் விட்டல், ரஜினியிடம் கேட்ட போது, உட்லண்ட்ஸ் ஓட்டல் சர்வர் அப்பாவை மறந்துவிட்டோமே, அவர் அந்த ஓட்டலில் வேலை செய்யவில்லை. குடும்ப கஷ்டம் காரணமாக ஊருக்கே போய்விட்டாராம் என்று கூறியிருக்கிறார். அதன்பின்பு, ரஜினியே அந்த நாராயண ராவை தேடிப்பிடித்து அவரது பெயரில் ஒரு கணிசமான தொகையை வங்கியில் டிபாசிட் செய்திருக்கிறார். அவரது மகனுக்கு நல்ல சம்பளத்தில் ஒரு நல்ல வேலையையும் வாங்கி கொடுத்திருக்கிறார். இப்படி தனக்கு கஷ்டத்தில் உதவியவர்களை மறக்காதவர் ரஜினி என, அவரது நண்பர் விட்டல் கூறியிருக்கிறார்.
தனது கணவன் மற்றும் 6 வயது பிஞ்சு மகளைத் தவிக்கவிட்டு, இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் ஓடிச் சென்ற சம்பவம்…
திருமண மேடையில் மணமகன் கழுத்தில் மாலை சூட வேண்டிய நேரத்தில், மணமகனைப் பார்த்தவுடன் மணப்பெண் திருமணத்தை நிறுத்தச் சொன்ன அதிர்ச்சி…
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணம் முடிந்த 14-வது நாளிலேயே மணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சரியாக நள்ளிரவு 12:07 மணி. நிஷா தனது புதிய பிளாட்டில் முதல் முறையாக தனியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே மெல்லிய…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய், மக்கள் நலன் கருதி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு…
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…