#image_title
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்தார். ஹீரோயினாக மனிஷா கொய்ராலா நடித்துள்ளார். சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்தியன் படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது.
கமல்ஹாசன் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்த இந்தியன் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு படம் ரசிகர்களிடையே வரவேற்பை வரவில்லை. இந்த நிலையில் இந்தியன் படம் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக எழுதப்பட்ட கதை என்பது உங்களுக்கு தெரியுமா..?
முதலில் சங்கர் ரஜினி வைத்து தான் இந்தியன் படத்தை எழுதி இருக்கிறார். அந்த படத்திற்கு பெரிய மனுஷன் என டைட்டிலும் வைத்துள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ரஜினியால் இந்தியன் படத்தில் நடிக்க முடியவில்லை. ரஜினி நிராகரித்து விட்டதால் இந்தியன் படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என சங்கரும் அவரது உதவி இயக்குனரும் ஆலோசித்துள்ளனர்.
முதலில் கமல்ஹாசனிடம் போய் கதை சொல்லலாம். அவர் ஓகே சொல்லிவிட்டால் சரி. அப்படி இல்லை என்றால் தெலுங்கு நடிகர் வெங்கடேசை மகன் கதாபாத்திரத்திலும், நடிகர் ராஜசேகரை அப்பா கதாபாத்திரத்திலும் நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கமல்ஹாசன் ஓகே சொன்னதால் அவரை வைத்து படத்தை எடுத்து விட்டனர். எதிர்பார்த்தபடி படமும் சூப்பர் ஹிட் ஆனது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…