Categories: சினிமா

என்ன ஜெயிக்க அவரால மட்டுமே முடியும்… 90 களில் ரஜினி சொன்ன அந்த நடிகர் யாரு தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

80 களில் ரஜினி சூப்பர் ஸ்டாராக வளர்ந்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியாளராக கமல்ஹாசன் இருந்தார். அதன் பின்னர் மோகனின் சில படங்களும் ரஜினி படத்தின் வசூலுக்கு போட்டியாக அமைந்தன. அதன் பின்னர் டி ராஜேந்தர், விஜயகாந்த் போன்றவர்களும் 80 களில் ரஜினிக்கு போட்டியாளராக இருந்தனர்.

அதே போல 90 களில் ராஜ்கிரண், கமல் போன்றவர்களும், 2000 களில் விக்ரம் போன்றவர்களும் ரஜினி படத்துக்கு நிகராக வசூலைக் கொடுத்தனர். இப்போது விஜய், அஜித் போன்றவர்கள் ரஜினி பட வசூலுக்கு இணையான வசூலைக் கொடுத்து வருகின்றனர். ஆனால் எல்லா காலத்திலும் யார் அதிக வசூல் கொடுத்தாலும் அவர்களை ரஜினிக்கு போட்டியாளர் என சொல்லும் அளவுக்கு ரஜினி அந்த இடத்தில் நிரந்தரமாக இருந்துள்ளார்.

இந்நிலையில்தான் ரஜினிகாந்த் ஒருமுறை தன்னுடைய படங்களின் வசூலை யாரால் முறியடிக்க முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “எனது படத்தின் வசூலை முறியடிக்க விஜயகாந்தால் மட்டுமே முடியும்” எனக் கூறியுள்ளார் ரஜினி. ரஜினி அப்படி சொல்லக் காரணம் தனக்கு இணையாக பி மற்றும் சி சென்டர் என சொல்லப்படும் கிராமப்புறங்களில் ரஜினிக்கு இணையான வளர்ச்சியையும் ரசிகர் மன்றங்களையும் விஜயகாந்த் உருவாக்கி வைத்திருந்தார்.

ரஜினி சொன்னது போலவே பல நேரங்களில் ரஜினி விஜயகாந்த் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகியுள்ளன. அதில் பெரும்பாலான முறை விஜயகாந்த் படம் ரஜினி படத்துக்கு இணையாகவே அல்லது அதிகமாகவோ வசூலைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

மகிழ்ச்சி விபரீதமான நொடி… கடலில் விழுந்த சுற்றுலாப் பயணி…! கழுத்தை இறுக்கிய பாராசூட் கயிறு பதறவைக்கும் வீடியோ…!

கோவா கடற்கரைக்குச் சுற்றுலா சென்ற பெண் ஒருவர், கடலில் பாராசெயிலிங் சாகசத்தில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக பாராசூட்டின் கயிறு அறுந்து…

5 minutes ago

“கிளைமாக்ஸ் நெருங்கிடுச்சு!.. 2 நாள் டைம்… விஜய்க்கு ஆளுநர் விதித்த கிடுக்கிப்பிடி கெடு… கிண்டியில் நடந்த பரபரப்பு சந்திப்பு”…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி…

5 minutes ago

3 வருஷமாச்சு… என் ₹1.44 லட்சத்தைக் கொடுங்க..! ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வீடியோவில் கதறவிட்ட முன்னாள் பணிப்பெண்…!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் விமானப் பணிப்பெண் ஒருவர், தனக்கு வழங்கப்பட வேண்டிய ₹1.44 லட்சம் நிலுவைத் தொகையை  அந்த நிறுவனம்…

9 minutes ago

திமுகவுக்கு ‘நிம்மதி’… விஜய்க்கு ‘ஆப்பு’?… “அந்த சீட்டை ராஜினாமா செய்யுமா காங்கிரஸ்”…. கடைசில இப்படி ஆகிடுச்சே….!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…

1 மணத்தியாலம் ago

“குடுத்து வச்சவங்க நீங்க” ஸ்கூட்டர் வாங்கப்போவதாகக் கூறி மகன் செய்த் செயல்… மகனின் சர்ப்ரைஸால் ஆனந்தக் கண்ணீரில் நனைந்த பெற்றோர்..!!

தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…

1 மணத்தியாலம் ago

“தளபதி 2.0.. ஒரே நேரத்தில்.. பல சேனல்களை ஆக்டிவேட் செய்த விஜய்”… இது வெறும் ஆரம்பம் தான்… தமிழக அரசியலில் ஒரு ‘டிஜிட்டல்’ புரட்சி….!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…

1 மணத்தியாலம் ago