நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் மீது தனக்குப் பொறாமை இருப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். தான் ஏற்கனவே அரசியலுக்கு வரப்போவதில்லை என விலகிவிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், “நான் அரசியலிலேயே இல்லாதபோது விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது? ஒருவேளை என் நண்பர் கமல்ஹாசன் முதலமைச்சராகியிருந்தால் எனக்குப் பொறாமை வந்திருக்கலாம்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கும் விஜய்க்கும் இடையே 25 ஆண்டுகளுக்கும் மேலான வயது வித்தியாசம் மற்றும் தலைமுறை இடைவெளி உள்ளதால், தன்னை விஜய்யுடனும், விஜய்யைத் தன்னுடனும் ஒப்பிட்டுப் பேசுவது இருவருக்குமே நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளையும், மத்தியில் உள்ள சக்திவாய்ந்த பாஜகவையும் எதிர்த்து, சினிமா துறையிலிருந்து வந்த ஒரு நபர் தனி ஆளாக நின்று 52 வயதிலேயே இந்த வெற்றியைப் பெற்றுள்ளது தனக்குப் பொறாமையைத் தராமல் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தையே அளிக்கிறது என்றும், மக்கள் மத்தியில் அவரிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருப்பதால் அவர் மக்களுக்குச் சிறப்பான நன்மைகளைச் செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் கூறி விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய அரசின் முக்கிய திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை புதிய…
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தங்கள் தந்தையின் மூல நோய்க்காக (Piles) அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி என அனைத்து வகையான மருத்துவ…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய ஆட்சியை அமைத்துள்ள நிலையில், திமுக எதிர்க்கட்சியாகப்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம்…
காதலனுடனான கள்ளத்தொடர்புக்குத் தடையாக இருந்த கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து, சமையலறையிலேயே பிணத்தைப் புதைத்துவிட்டு, அதன் மேலேயே சமையல் செய்து…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பெரும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்…