#image_title
இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். அவரின் பயோபிக் இப்போது தனுஷ் நடிப்பில் உருவாக உள்ளது. அந்த படத்துக்கும் அவரே இசையமைக்க உள்ளார்.
இளையராஜா புகழின் உச்சில் இருந்த போது ரஜினி, கமல் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு அவர் இசையமைத்த படங்கள் பெரும்பாலும் ஹிட் படங்களாக அமைந்தன. அதிலும் ரஜினிக்கு அவர் இசையமைத்த மாஸ் மற்றும் சோகப் பாடல்கள் இன்றளவும் பேசப்படுபவைகளாக உள்ளன.
ரஜினி – இளையராஜா கூட்டணி வள்ளி திரைப்படத்தோடு முடிவுக்கு வந்தது. ரஜினி பாலச்சந்தர் தயாரிப்பில் அண்ணாமலை படத்தில் நடித்த போது அந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அப்போது பாலச்சந்தர் நிறுவனத்துக்கும் இளையராஜாவுக்கும் இடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் நிறுவனத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்ற முடிவில் இளையராஜா இருந்துள்ளார்.
அதனால் அந்த படத்துக்கு தேவா இசையமைத்தார். அதன் பின்னர் ரஜினி இளையராஜா கூட்டணி அமையவேயில்லை. ஆனால் அதன் பிறகு இளையராஜா அளித்த ஒரு நேர்காணலில் “ரஜினி என்னிடம் கேட்டிருந்தால் அவருக்காக நான் அண்ணாமலை படத்திற்கு இசையமைத்திருப்பேன்” என்று கூறினாராம்.
இதே போல ரஜினியும் “நான் வேண்டுமானால் இளையராஜா சாமியிடம் பேசிப் பார்க்கவா எனக் கேட்டுள்ளார். ஆனால் சுற்றியிருந்தவர்கள் ரஜினி என்ன கடவுளே வந்து சொன்னாலும் நான் அந்த படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என சொல்லிவிட்டதாக அவரிடம் கூறியுள்ளனர். இதனால் ரஜினி இளையராஜாவிடம் அதுபற்றிக் கேட்கவேயில்லையாம். இப்படி ஒரு தவறான தகவல் பரிமாற்றத்தால் ரஜினி- இளையராஜா காம்பினேஷன் முடிவுக்கு வந்துள்ளது.
ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…