Categories: சினிமா

நான்லாம் எப்ப கமல் மாதிரி ஹீரோவாகி அதிக சம்பளம் வாங்கப் போறனோ?… நடிகையின் அம்மாவிடம் புலம்பிய ரஜினி!

Spread the love

1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.

படத்தின் கதாநாயகர்களுக்கு இணையாக அவருக்கும் கைதட்டல், விசில்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்த நேரத்தில் பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார் ரஜினி. அந்த படம் வெற்றி பெற்று அவரை நிரந்தரக் கதாநாயகனாக்கி விட்டது. ஆனால் அதன் பிறகு ரஜினியை ஒரு வெற்றிகரமான கதாநாயகன் ஆக்கியது பஞ்சு அருணாச்சலம்தான். அவர்தான் பிரியா என்ற படத்தில் ரஜினியைக் கதாநாயகன் ஆக்கி சிங்கப்பூர் எல்லாம் சென்று படமாக்கி வந்தார்.

ஆனாலும் சில ஆண்டுகள் தன்னால் ஒரு நிரந்தர ஹீரோவாகிவிட முடியும் என்ற நம்பிக்கை ரஜினிக்கு இல்லையாம். இதுபற்றி மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஒரு சுவாரஸ்யமான தகவலை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “நான், ரஜினி மற்றும் கமல் ஆகிய மூவரும் மூன்று முடிச்சு படத்தில் இணைந்து நடித்தோம். அந்த படத்தில் கமல்ஹாசனுக்கு 30000 ரூபாய் சம்பளம், எனக்கு 5000 ரூபாய், ரஜினிக்கோ 2000 ரூபாய்தான்.

அப்போது ரஜினி, நான் எப்போதாவது கமல் மாதிரி ஹீரோவாகி அவர் வாங்குவது போல சம்பளம் வாங்குவேனா? எனக் கூறியுள்ளார். அதைக் கேட்ட என் அம்மா, கண்டிப்பா நீங்களும் ஹீரோ ஆவீங்க.. அதே போல அதிக சம்பளம் வாங்குவீங்க என்றார்” எனக் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி அம்மா சொன்னது போலவே அடுத்த சில ஆண்டுகளிலேயே ரஜினி ஹீரோவானார். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசனை விட அதிக சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் நடிகரானார் என்பதுதான் இதில் சுவாரஸ்யம்.

vinoth

Recent Posts

“பெற்றோர் இல்லாத நேரம்.. மிரட்டி மிரட்டி வன்கொடுமை”… 15 வயது சிறுமியை சீரழித்த தாய்மாமன்.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

3 minutes ago

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

15 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

17 minutes ago

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

19 minutes ago

“தப்பிக்க 3 செகண்ட் தான் இருந்தது” என் கண் முன்னே சாம்பலாகி போயிட்டாங்க… திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர் பிழைத்தவர் பகீர் வாக்குமூலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…

20 minutes ago

ஈரானின் ‘மரணப் பொறி’..? கடல் கண்ணிவெடிகளுக்கு நடுவே சிக்கிய கப்பல்கள் – மீட்க களமிறங்கும் IMO… உலகத்தையே உலுக்கும் கப்பல் போக்குவரத்து நெருக்கடி…!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…

23 minutes ago