தமிழக அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அண்மையில் மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேமுதிக குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேமுதிக ஒரு கட்சியா என அவர் கேள்வி எழுப்பியதும், காங்கிரஸ் கட்சி குறித்து “வந்தால் வரட்டும், போனால் போகட்டும்” என அவர் பேசியதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. தேர்தல் நெருங்கும் வேளையில், அமைச்சரின் இந்தப் பேச்சு கூட்டணி உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததால் திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்தது.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ராஜகண்ணப்பனின் அரசியல் பின்புலத்தை விமர்சித்து பதிலடி கொடுத்தார். அதேபோல், காங்கிரஸ் கட்சியினரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஏற்கனவே கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்த நிலையில், ஒரு மூத்த அமைச்சரே இவ்வாறு பேசியது தலைமைக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியது.
இதன் விளைவாக, நெல்லை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றிருந்த அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக தலைமை உடனடியாக சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. தலைமையின் உத்தரவை அடுத்து, நெல்லையில் பங்கேற்க வேண்டிய கூட்டங்களை பாதியிலேயே ரத்து செய்த அமைச்சர், தூத்துக்குடி விமான நிலையம் வழியாக அவசரமாக சென்னைக்கு விரைந்தார். கூட்டணி விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டிய சூழலில், அமைச்சரின் தன்னிச்சையான பேச்சு கட்சி மேலிடத்தை கோபமடையச் செய்துள்ளது.
சென்னையில் முதலமைச்சர் அல்லது கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்கும் ராஜகண்ணப்பனிடம், இந்த சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ள நிலையில், தேவையற்ற சலசலப்புகளைத் தவிர்க்க அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது எச்சரிக்கையுடன் விடுவிக்கப்படுவாரா என்பது அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
தொகுதிப் பங்கீடு தொடர்பான சிறுசிறு சலசலப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, கொள்கை ரீதியான பெரும் போராட்டத்திற்காக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீண்டும்…
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…