பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதி நாடாக இத்தாலி தலைநகர் ரோம் நகருக்குச் சென்றபோது, அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைச் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி, பார்லே நிறுவனத்தின் புகழ்பெற்ற ‘மெலோடி’ மிட்டாய் பாக்கெட் ஒன்றை மெலோனிக்குப் பரிசாக வழங்கினார். இத்தாலி பிரதமர் மெலோனி இந்த சுவாரசியமான நிகழ்வின் காணொளியைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, “பரிசுக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். மோடியும் மெலோனியும் புன்னகையோடு மிட்டாய் பாக்கெட்டை கையில் ஏந்தியிருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான ரேபரேலிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சுதந்திர போராட்ட வீரர் வீர பாசியின் திருவுருவச்சிலையைத் திறந்து வைத்தார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் நாட்களில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் உரம், பெட்ரோல், டீசல், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் என்றும் எச்சரித்தார். மேலும், பிரதமர் மோடி நாட்டின் அரசியல் சாசனத்தை திட்டமிட்டுச் சிதைத்து வருவதாகவும் அவர் தனது உரையில் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இத்தாலியில் மிட்டாய் வழங்கிய விவகாரத்தைக் கையில் எடுத்த ராகுல் காந்தி, நாட்டின் மீது கடுமையான பொருளாதாரப் புயல் வீசிக் கொண்டிருக்கும் வேளையில் பிரதமர் இத்தாலியில் டாஃபி (மிட்டாய்) बांट रहे हैं (வழங்கிக் கொண்டிருக்கிறார்) எனச் சாடினார். “விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் என அனைவரும் பொருளாதாரச் சுமையால் அவதிப்பட்டு வரும் நிலையில், பிரதமர் சிரித்தபடி ரீல்ஸ் செய்து கொண்டிருக்கிறார்; அதற்கு பாஜகவினர் கைதட்டுகின்றனர். இது தலைமைத்துவம் அல்ல, வெறும் நாடகமே” என்று தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பிரதமர் மோடியை அவர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…