தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சமீப காலமாகவே ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என குரல் எழுப்பி வருவதால் ஸ்டாலினுக்கு இது பெரிய சிக்கலாகவே மாறி உள்ளது.
கூடுதல் தொகுதிகளை ஸ்டாலின் ஒதுக்காத பட்சத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை. காங்கிரஸ் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள நிலையில் திமுகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. அதேசமயம் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தவெக உடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் தலைமை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் – தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணியில் தொடர விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…