ஜோதிட சாஸ்திரத்தின் படி பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்ப மாற்றங்களானது 12 ராசிகளையும் சாதக பாதகம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதில் ராகு பெயர்ச்சிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அதிகாலை 2.11 மணிக்கு ராகு ராசியை மாற்றுகிறார். தற்போது ராகு பூர்வ பாத்ர பாத நட்சத்திரத்தின் முதலிடத்தில் உள்ளார். டிசம்பர் இரண்டாம் தேதி சதாபிஷ நட்சத்திரத்தில் நான்காவது இடத்தில் இடம்பெயர்ச்சி அடைகிறார். இந்த ராகு பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்தினாலும் குறிப்பிட்டு மூன்று ராசிகளுக்கு எதிர்ப்பாராத வகையில் பொருளாதார முன்னேற்றத்தையும் செல்வ செழிப்பையும் கொடுக்கும்.
அதன்படி மிதுன ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் மிகவும் சாதகமாக பலன்களை கொடுக்க வாய்ப்புள்ளது. பல நாட்களாக முயற்சி செய்து வந்த விஷயங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும் . குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பணவரவு திருப்திகரமாக அமையும்.
கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சியானது தொழில் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். கடின உழைப்புக்கு எதிர் பார்த்ததைவிட அதிகமான பலனை ராகு கொடுக்கப் போகிறார் .குடும்ப சூழல் மற்றும் ஆரோக்கியம் மேம்படும். மன அமைதி, தொழில் மிதமான ஆர்வம் அதிகரிக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு எதிர்ப்பாராத பணவரவையும், பதவி உயர்வையும் கொடுக்கப்போகிறது. வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த காலகட்டம் உச்சகட்ட லாபத்தில் கொடுக்கும். நிதி விஷயங்களில் நிலைத்தன்மை உண்டாகும். நீண்ட காலம் முதலீடுகள் அதிக லாபத்தை கொடுக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லவும், புதிய துறையில் வேலை செய்யவும் வாய்ப்பு உருவாகும்.
தமிழ் திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்படும் முன்னணி தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மறைவு ஒட்டுமொத்த சினிமா துறையையும் நிலைகுலையச் செய்துள்ளது.…
தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் அரசியல் சதுரங்க வேட்டையைத் துவக்கி…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை கிண்டியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு அசாதாரணமான சூழல்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், திருமண நாளன்றே மணமகளுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…