குரூப் டான்ஸராக இருந்து பிறகு நடன இயக்குனராக தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை பிடித்தவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு இவர் படிப்படியாக நடிப்பு மற்றும் இயக்கம் என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். சினிமாவை தவிர்த்து மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக நடனம் கற்பிப்பது, அவர்களின் நலனுக்காக பல நலத்திட்டங்களை தன்னார்வல நிறுவனங்களுடன் இணைந்து செய்து வருகின்றார். தொடர்ந்து பல உதவிகளை செய்து வரும் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையில் லாரன்ஸ் உடன் நடிகர் எஸ் ஜே சூர்யா, நடிகர் பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.
சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பாக மாற்றம் என்ற செயல்திட்டம் ஒன்றை லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை தன்னார்வலர்களின் உதவியோடு செய்து வருகின்றார். விவசாயிகளுக்கு டிராக்டர், பெண்களுக்கு தையல் மிஷின் என தொடர்ச்சியாக உதவிகளை செய்து வருகின்றார். அதன்படி தற்போது கால்கள் செயலிழப்பால் ஊனமுற்ற ஸ்வேதா என்ற சிறுமிக்கு முன்னதாக நடமாடுவதற்காக ஒரு ஸ்கூட்டியை பரிசளித்திருந்தார்.
இப்போது அவளுக்காக ஒரு வீடு கட்டுவது அவளுடைய வாழ்க்கையை உண்மையில் மாற்றும் என்று நினைத்ததால் அவருக்காக ராகவா லாரன்ஸ் வீடு கட்ட முன்வந்துள்ளார். மேலும் அவள் ஒரு தங்க இதயம் கொண்ட பெண், அவளை ஆதரிக்க என் சொந்த இதயம் துடிக்கிறது எனவும் ராகவா லாரன்ஸ் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த உதவிக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…