#image_title
தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்கினாலும் உதவும் மனப்பான்மை என்பது சிலருக்கு மட்டுமே இருக்கின்றது. அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். தனது சினிமா கெரியர் மூலம் பிரபலமானாரோ இல்லையோ தன்னுடைய உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கின்றார்.
பல மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்து வந்த இவர் சேவையே கடவுள் என மாற்றம் என்கின்ற அறக்கட்டளை ஒன்றைக் கடந்த மே ஒன்றாம் தேதி தொடங்கி இருந்தார். இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இது தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இதில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யாவும், இந்த மாற்றம் அறக்கட்டளையில் இணைந்து செயல்பட்டு வருகின்றார். அவர் மட்டும் இல்லாமல் கலக்கப்போவது யாரு பாலா, அறந்தாங்கி நிஷா, செஃப் வினோத் ஆகியோர் இந்த அறக்கட்டளையில் இணைந்து மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். கே பி ஒய் பாலா ஏற்கனவே ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பல உதவிகள் செய்து வருவதை வீடியோவாக வெளியிட்டு வந்தார்.
தற்போது அடுத்த கட்டமாக மாற்றம் அறக்கட்டளை மூலம் தமிழக மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை தன்னார்வலர்கள் மூலம் செய்து கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் பத்து ஊர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டு அதற்கான பயணத்தை தொடங்கி இருந்தார் ராகவா லாரன்ஸ்.
முதலில் இரண்டு ஊர்களில் மூன்று டிராக்டர்கள் வழங்கப்பட்ட வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார். இவர் சொல்லும் இடங்களில் எல்லாம் செஃப் வினோத்தும் அவருடன் சென்று சமைத்துக் கொடுத்து வருகிறார். ராகவா லாரன்ஸ் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று வினோத் சிறந்த உணவை தயாரித்து கொடுத்து வருகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்ததாவது “மாற்றம் தேடுதல் பயணத்தில் எங்களுடன் இணைந்ததற்கும், தேவைப்படும் சரியான நபர்களை கண்டறிந்து கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு 10 டிராக்டர்களை வழங்கியதற்கும், செஃப் வினோத் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த கடினமான சவாலான பயணத்தில் மிகவும் அன்புடன் உங்கள் சுவையான உணவால் எங்கள் வயிற்றையும் இதயத்தையும் நிரப்பினீர்கள். உங்கள் சேவைக்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…
அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…