“எனக்கு இருக்குற ஒரே நண்பன் அவர்தான்”…. முதலமைச்சர் விஜய் பற்றி ராகவா லாரன்ஸ் உடைத்த ரகசியம்… ஜூன் 11-ல் நடக்கப்போகும் அந்த ‘சம்பவம்’….!

Spread the love

சமூக வலைதளங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறார் நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ். சமீபத்தில் அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தலில் போட்டியிடப் போவதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் ஒரு விளக்கப் பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “ஜூன் 11-ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது புதிய படம் குறித்த அறிவிப்பா, அரசியல் நகர்வா அல்லது அவரது வழக்காமான சமூக சேவை திட்டமா என்ற விவாதங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ராகவா லாரன்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய முதலமைச்சரான நடிகர் விஜய் குறித்துப் பேசிய பழைய பேட்டி ஒன்றின் வீடியோவை விஜய் ரசிகர்கள் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அந்தப் பேட்டியில் சினிமாவில் தனக்கு இருக்கும் ஒரே நல்ல நண்பர் விஜய் மட்டும்தான் என்று லாரன்ஸ் வெளிப்படையாகக் கூறியுள்ளார். ‘மேகமாய் வந்து போகிறேன்’ பாடல் காலத்திலிருந்தே தங்களுக்குள் இருக்கும் நட்பு மிகவும் ஆழமானது என்றும், தனது வாழ்வில் நடக்கும் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் விஜய்யிடமிருந்துதான் முதல் அழைப்பு வரும் என்றும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

மேலும், தங்களது தூய்மையான நட்பை அவர்கள் இருவரும் ஒருபோதும் தொழிலோடு கலந்ததே இல்லை என்பதை லாரன்ஸ் பெருமையோடு சுட்டிக்காட்டியுள்ளார். தான் விஜய்யிடம் சென்று படம் பண்ணலாம் என்றோ, அல்லது விஜய் தன்னை டான்ஸ் மாஸ்டராக பணியாற்றும்படியோ இதுவரை கேட்டுக்கொண்டதே இல்லை என்றும், அதுவே தங்களின் தனித்துவம் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, ஒருமுறை விஜய் தன்னிடம் “என் மகன் சஞ்சய் உங்களுடைய பெரிய ரசிகர்” என்று பெருமையுடன் கூறிய நினைவுகளையும் லாரன்ஸ் அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஒருபுறம் ஜூன் 11-ஆம் தேதி வெளியாகப்போகும் அந்த முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம், மறுபுறம் விஜய் – லாரன்ஸ் இருவரின் “வேற லெவல்” நட்பு குறித்த நெகிழ்ச்சியான வீடியோ என ஒட்டுமொத்த சமூக வலைதளங்களும் இப்போது ராகவா லாரன்ஸைப் பற்றிய பேச்சுகளால் நிறைந்துள்ளன. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்ட நிலையிலும், ஜூன் 11 அன்று லாரன்ஸ் மாஸ்டர் உடைக்கப்போகும் அந்த மௌனம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Nanthini

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்..! 50 மீட்டர் தொலைவில் போலீஸ்… சிதறிய தோட்டாக்கள்… அடுத்தடுத்து பலியான தந்தை – மகன்.. உ.பி-யில் பரபரப்பு…!!

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரௌத் கொத்வாலி பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிலைய போலீஸ் சாவடியில் இருந்து வெறும்…

7 மணத்தியாலங்கள் ago

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்… அண்ணாமலையுடன் இணையும் ராகவா லாரன்ஸ்..? அதிர்ச்சியில் விஜய்..!!

நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேலும்,…

7 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்: சிறுமியாக இருந்தபோது தொடங்கிய பாலியல் தொல்லை.. 60 வயது முதியவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!!

உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாமுராத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த 2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, அவரது…

7 மணத்தியாலங்கள் ago

“கழிப்பறையில் அடைத்து வைத்து.. 7 வயது சிறுமியை சீரழித்த வெறிச்செயல்..! 13 வயது சிறுவர்களா இப்படி..? வங்கதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!”

வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டம், தாஹிர்பூர் எல்லைக் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த…

8 மணத்தியாலங்கள் ago

குடிபோதையில் வந்த வினை… நண்பனுடன் ஏற்பட்ட தகராறில்… இளைஞர் அடித்துக் கொலை.. மூன்று நாட்கள் கழித்து அம்பலமான விபத்து நாடகம்… சிக்கியது எப்படி…?

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாரம்பேடு பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி இரவு, சாலையோரப் பள்ளத்தில் இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை … நம்பி வந்த வடமாநில பெண்ணின் கதறல்…!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, 14 வயது மதிக்கத்தக்க தனது வளர்ப்பு மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த…

9 மணத்தியாலங்கள் ago