Categories: சினிமா

அந்த வேலையெல்லாம் சில்க்கிடம் நடக்காது.. கூடப் பணியாற்றிய நடிகை பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் கதாநாயக, கதாநாயகிகளுக்கு என்று ஒரு ரசிகப் பெரும்கூட்டம் இருப்பது கவர்ச்சி நடிகைகளுக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. அவர் தான் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சி வேடங்களையே தேடி தேடி நடித்தார் என்றாலும், அவரிடம் ஒரு தனித்துவம் இருந்தது. இதனால் தென்னிந்தியா முழுவதும் அவருக்கு படங்களுக்கு வரவேற்பு இருந்தது.

ஆனாலும் அவர் தன்னுடைய 35 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்றுவரையும் அவரின் மரணத்துக்கான காரணம் மிகவும் மர்மமாகவே உள்ளது. அப்படி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் வாழ்க்கையை தழுவி தி டர்ட்டி பிக்சர் எனும் திரைப்படம் இந்தியில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் ஒருமுறை “நீங்கள் இயக்கியதில் உங்களைக் கவர்ந்த கருப்பு நிறம் கொண்ட நடிகை யார்?” என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு அவர் “நான் சில்க் ஸ்மிதாவைதான் சொல்வேன். நான் அர்ச்சனா, சில்க் ஸ்மிதா மற்றும் மௌனிகா ஆகியோரை இயக்கியுள்ளேன். அதில் சில்க் ஸ்மிதாவைதான் stunningly beautiful என்று சொல்வேன்.” எனப் பாராட்டியிருந்தார்.

அப்போதெல்லாம் நிறைய தயாரிப்பாளர்கள் சம்பள பாக்கி வைத்துவிட்டு பின்னர் அதைக் கொடுக்காமலேயே ஏமாற்றி விடுவார்களாம். அது போன்ற தயாரிப்பாளர்களை சில்க் ஸ்மிதா டீல் செய்யும் விதமே வேறாம். இந்நிலையில் சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகையாக நடித்த பல படங்களில் கதாநாயகியாக நடித்த ராதிகா அவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “தயாரிப்பாளர்கள் யாராவது வந்து சம்பளம் அப்புறமாக தருகிறேன் என்று சொன்னால், ‘ஏன் சார் எனக்கு இப்போ மார்க்கட் இருக்கு. அதனால்தான் என்கிட்ட வர்றீங்க. கேமரா எங்க வேணாலும் வச்சு ஷூட் பண்றீங்க.  காலுக்கு கீழ வச்சுக்கிறீங்க. இதுவே எனக்கு மார்க்கெட் இல்லன்னா என்ன நடிக்கக் கேட்டு வருவீங்களா?. சம்பளம் கொண்டு வாங்க நடிக்கிறேன்’ என்று கறாராக சொல்வார் சில்க் ஸ்மிதா.” எனத் தெரிவித்துள்ளார்.

vinoth

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

4 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

4 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

4 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

5 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago