பீகாரில் முன்னாள் முதல்வர்கள் தங்களுக்கு அரசு ஒதுக்கிய பங்களாக்களில் ஆயுள் முழுவதும் தங்கியிருக்கலாம் என்ற சட்டம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ரப்ரி தேவி, பாட்னாவின் 10, சர்குலர் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று புதிய பாஜக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த இல்லத்தில் வசித்து வரும் ரப்ரி தேவி, வீட்டை காலி செய்யப்போவதில்லை என முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு சவால் விடுத்துள்ளதால், அந்த பங்களாவிற்கு வெளியே தற்போது பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற பீகார் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, மாநில பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நந்த கிஷோர் ராமுக்கு இந்த பங்களா தற்பொழுது அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ரப்ரி தேவிக்கு அரசு பங்களாவை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல; இதற்கு முந்தைய நிதிஷ் குமார் ஆட்சியின் போதும் அவருக்கு புதிய வீட்டிற்கு மாறுமாறு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், அவர் அந்த உத்தரவுக்கு இணங்காமல் தொடர்ந்து அதே பங்களாவிலேயே வசித்து வருகிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நந்த கிஷோர் ராம், அரசு பங்களா என்பது ஒரு தனிப்பட்ட சொத்து அல்ல என்றும், ரப்ரி தேவிக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட புதிய வீட்டிற்கு அவர் குடிபெயர அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பீகார் சட்டசபை சபாநாயகர் பிரேம் குமாரும் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, அவையின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசு வகுத்துள்ள விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…