#image_title
தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் வரிசையாக தமிழ் சினிமாவுக்கு வந்து வெற்றிகரமாக படங்களைக் கொடுத்தனர். இயக்குனர்களாக ஆபாவாணன், ஆர் கே செல்வமணி, செந்தில்நாதன் உள்ளிட்டோரும் நடிகர்களாக நாசர், ராம்கி மற்றும் அருண் பாண்டியன் ஆகியோரும் ஜொலித்துக் கொண்டிருந்தனர்.
இதில் தொடக்கத்திலேயே உச்சகட்ட வெற்றியைப் பெற்றவர் ஆர் கே செல்வமணி அவர் இயக்கிய புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் மற்றும் செம்பருத்தி ஆகிய முதல் மூன்று படங்களும் சூப்பர் ஹிட் ஆகி அவரை முன்னணி இயக்குனர் ஆக்கின.
ஆனால் அதன் பிறகு அவர் இயக்கிய எந்த திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதனால் அவர் திரைப்பட சங்கங்களின் தேர்தலில் நின்று தற்போது ஃபெப்சியின் தலைவராக உள்ளார். இதற்கிடையில் தன் படத்தில் நடித்த நடிகை ரோஜாவை திருமணம் செய்துகொண்டார். அவர் இப்போது ஆந்திர அரசியலில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.
#image_title
செல்வமணி இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை என்றொரு படம் உருவானது. அந்த படம் ஒரு அரசியல் தலைவரின் படுகொலையை மையப்படுத்தி புனையப்பட்ட கதை. அதில் ராம்கி, ரஹ்மான், ரோஜா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். படம் முடிந்து சென்சாருக்கு சென்றபோது அதில் ஏகப்பட்ட திருத்தங்கள் சொல்லியதால் சிக்கல் எழுந்துள்ளது.
அதனால் பல சிக்கல்கள் உருவாகி அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு 15 ஆண்டுகள் கழித்து 2007 ஆம் ஆண்டுதான் பல சென்சார் கட்களுக்குப் பிறகு ரிலீஸானது. ஆனாலும் அந்த படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டு பல ஆண்டுகள் தாமதம் ஆகி ரிலீஸான படம் என்ற சாதனையைக் ‘குற்றப் பத்திரிக்கை’ படைத்துள்ளது.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…