2024ம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த 5 திரைப்படங்களில் ஒன்று சூர்யாவின் கங்குவா திரைப்படம். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது.
‘கங்குவா’. 38 மொழிகளில், 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில் உலகமெங்கும் என்று சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகி உள்ளது. படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கும் என்று சூர்யா, சிவா ஆகியோர் முன்பாக அளித்திருந்த பேட்டிகளில் கூறியிருந்தனர். அதன்படி தங்குவா படத்தில் கார்த்தி இருக்கிறாரா? இல்லையா? என்பது ரிலீசுக்கு முன்பே பெரிய கேள்வியாக இருந்தது.
அதற்கு விடை அளிக்கும் விதமாக தற்போது கார்த்தி கேமியோ ரோலில் கிளைமாக்ஸ்-ல் நடித்துள்ளார். சூர்யா இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் அடங்கியிருக்க இறுதியாக ரோலக்ஸ் முகம் வந்து சூர்யா என்று டைட்டில் போட்டுள்ளனர் . இதற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகள் இருந்தாலும் முக்கியமான காட்சி என்றால் சூர்யா முதலையுடன் சண்டேடும் காட்சி தான் இதில் செம மாஸ்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே முதலலையோடு சண்டையிடும் காட்சி முதல் முறையாக இந்த படத்தில் தான் இடம் பெற்றுள்ளது. இது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஃபயர் சாங் விஷுவல் வேற லெவலில் உள்ளது. இது தவிர ஒரு ஸ்பெஷல் பாடலையும் படத்தில் சர்ப்ரைஸ் ஆக வைத்துள்ளார்கள். அதைக் கேட்டவுடன் புல்லரிக்க வைக்கிறது. இந்த படத்திற்காக சூர்யா இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான். படத்திற்காக மீண்டும் சிக்ஸ் பேக் உடன் இருந்தார். இதை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டும்பொழுது அரங்கமே அதிர்கிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…