“கோமாளி கூட்டம் கையில் ஆட்சி… கோட்டையில் ஓட்டை விழுந்துடும்”…. தவெக அரசை அலறவிட்ட ஆர்.பி. உதயகுமார்… அலறும் அரசியல் களம்…!

Spread the love

அரசு இயந்திரத்தைத் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தினால் சட்டத்தின் முன் சம்மட்டி அடிதான் கிடைக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காட்டமாக விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால் கோட்டையில் ஓட்டைதான் விழும்” எனக் குறிப்பிட்டதோடு, சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றாமல் ஆட்சி அதிகாரத்தைத் தன்னிச்சையாக இயக்கிய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உச்சந்தலையில் ஆணி அடித்தாற்போன்ற தீர்ப்பை வழங்கியுள்ளது என்று சாடினார்.

தொடர்ந்து காவிரி டெல்டா விவசாயிகளின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய அவர், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடகா உரிய தண்ணீரைத் திறக்காததால் பயிர்கள் காய்ந்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர் என்று கவலை தெரிவித்தார். மேகதாட்டு அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலைமையில், தமிழகத்தின் ஜீவாதார உரிமையைப் பாதுகாக்கத் த.வெ.க அரசு என்ன போர்க்கால நடவடிக்கை எடுத்தது என்றும், உரிமைகளை மீட்டெடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழுப்பினார்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்ட உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததைச் சுட்டிக்காட்டிய உதயகுமார், அரசின் கொள்கை முடிவு சட்டத்திற்கு எதிராக இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என்பதை இத்தீர்ப்பு உணர்த்தியுள்ளது என்றார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 16 வழங்கும் சமத்துவ உரிமைகளை மீறி, கோடிக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காகக் காத்துக்கொண்டிருக்கும் சூழலில், இத்தகைய சட்டவிரோத நியமனங்களைச் செய்வது அடிப்படை நிர்வாக அறிவற்ற செயலாகும் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

மேலும், சட்டஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் நிதிப் பற்றாக்குறை எனத் தமிழகம் பல்வேறு சிக்கல்களில் தவிக்கும் வேளையில், முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வராமல் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். “மக்களுக்குப் பிரச்சனை என்றால் கேள்வி கேட்பேன்” என்று கூறிய முதல்வர் இப்போது எங்கே போனார் என்று வினவிய அவர், ஆட்சிச் சக்கரம் தர்மத்தின் பக்கமும் சட்டத்தின் பக்கமும் மட்டுமே சுழல வேண்டும் எனத் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.

Nanthini

Recent Posts

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

1 minute ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

12 minutes ago

1.5 வயது குழந்தையை தாக்கி 25-வது மாடியிலிருந்து வீசிய 10 வயது சிறுமி…! லிப்டில் நடந்த கொடூரம்…. இணையத்தில் தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ…!!

சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…

15 minutes ago

“என் கண் முன்னாடியேவா?!”… மகளின் வீட்டில் நடந்ததை பார்த்து கொந்தளித்த தந்தை… நொடியில் முடிந்த 24 வயது இளைஞரின் உயிர்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…

25 minutes ago

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

36 minutes ago

ஐயோ கடவுளே… ஒரு செகண்ட்ல எல்லாம் போச்சே… காதலன் கண்முன்னே ஏழாவது மாடியிலிருந்து… கீழே விழுந்த இரண்டு குழந்தைகளின் தாய்… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…

54 minutes ago