“கால்வாயில் சுற்றிய மலைப்பாம்பு”…. 16 வயது சிறுவனின் மரணத்தில் வெளியான அதிர்ச்சி போஸ்ட் மார்ட்டம் அறிக்கை…. ஒட்டுமொத்த கிராமத்தையே உலுக்கிய சம்பவம்…!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம், ராம்கோலா எல்லைக்குட்பட்ட டெகுவாட்டார் பர்வா சாப்ரா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கிஷன் ராஜ்பர். இவர் நேற்று முன்தினம் தன் நண்பர்களுடன் சேர்ந்து கிராமத்தின் அருகே உள்ள கால்வாயில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அடர்ந்த நாணல் புதர்கள் நிறைந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த மலைப்பாம்பு ஒன்று கிஷனைத் தாக்கி, அவரது உடலை இறுக்கிச் சுற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பாம்பின் பிடியில் சிக்கிய சிறுவன் வலியால் அலறவே, அருகிலிருந்த மக்கள் ஓடிவந்து தடிகளால் பாம்பை அடித்துச் சிறுவனை மீட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

உடனடியாக மயக்கமடைந்த கிஷனை அவரது தந்தை ராம்கோலா சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டு சென்றார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காகக் குஷிநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும், அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் வருண் சிங் உத்தரவின் பேரில் வனத்துறையினர் அடர்ந்த புதர்களில் மறைந்துள்ள மலைப்பாம்பைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிஷன் மலைப்பாம்பு கடித்ததாலோ அல்லது பாம்பு இறுக்கியதாலோ உயிரிழக்கவில்லை எனவும், தண்ணீரில் மூழ்கியதே அவரது மரணத்திற்குக் காரணம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாம்பு நெரித்துக் கொன்றதாக எழுந்த தகவல்கள் பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளன.

இது குறித்து ராம்கோலா காவல் நிலையப் பொறுப்பாளர் சந்திரபான் சிங் கூறுகையில், மலைப்பாம்பு சிறுவனைச் சுற்றிக்கொண்டதை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை என்றும், கிஷனுடன் மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்கள் கூறிய தகவலின் அடிப்படையிலேயே இந்தச் செய்தி பரவியதாகவும் விளக்கியுள்ளார். மீட்புக் குழுவினர் காப்பாற்றியதாகக் கூறப்படும் நிலையில், தண்ணீரில் மூழ்கி இறந்ததாக வந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும், தப்பியோடிய மலைப்பாம்பின் மர்மமும் அப்பகுதி மக்களிடையேயும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

2 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

3 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

3 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

3 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago