சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, கரூர் சம்பவத்தில் அனைவரும் ஆராய்ந்து உண்மையை கண்டுபிடிப்பது அவசியம். அதன் பிறகு தான் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிலர் விரைவாக விஜயை கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இருந்தாலும் சம்பவத்தில் உண்மையை ஆராயாமல் அவர்தான் முழு பொறுப்பு என்று குற்றம் சாட்டுவது தவறு. இந்த ஒரு சம்பவத்தை பயன்படுத்தி அரசியலில் இருந்தே விஜய்யை வெளியேற்றுவதற்காக சிலர் திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
அவரை முழுமையாக புறக்கணிப்பது தான் குறிக்கோள் என்று காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவது தவறானது. காவல்துறை ஏற்கனவே விஜயின் மாநாடுகளை கண்காணித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மட்டுமல்லாமல் பலர் அவரை பார்ப்பதற்காக வந்தார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்திற்கு பிறகு காவல்துறையின் அறிவுறுத்தலின்படி விஜய் உடனடியாக வெளியேறினாரா அல்லது தனியாக வெளியேறினாரா என்பது போன்ற விவரங்கள் வெளிப்படையாக தெரிய வேண்டும்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு அவர் வீட்டில் முடங்கி கிடக்காமல் பொதுமக்களுக்கு அவர் வெளியில் வருவதே இப்போது அவசியம். விஜய் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை நிலை நாட்ட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அரசியலுக்கு வந்தவர். அவரை மொத்தமாக முடித்துக் கட்டுவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். கரூர் சம்பவத்தை முறையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…