மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் கிதிர்பூர் ரயில் நிலையம் அருகே, இளைஞர்கள் சிலர் ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் காணொளிகள் வெளியாகி வருகின்றன. இந்த காணொளிகளில் இளைஞர்களின் பொறுப்பற்ற செயல்கள் பதிவாகியுள்ளன. அந்தவகையில்ஒரு காணொளியில், இளைஞர்கள் ரயிலின் அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவதைக் காணலாம். மற்ற இளைஞர்கள் ரயிலின் வாசலில் நின்றுள்ளனர். மற்றொரு காணொளியில், ஒரு இளைஞர் ரயிலின் கூரை மீது ஏறிச் செல்வதையும், மற்றொருவர் ரயிலின் படிக்கட்டில் நின்று கொண்டு ஆபத்தான நிலையில் பயணிப்பதையும் காண முடிகிறது.
West Bengal is getting worse day by day. pic.twitter.com/zKxLXUToed
— Samyukta Jain (@Drpooookie) January 6, 2026
இந்த சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள், மற்றவர்களின் உயிரைப் பணயம் வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது ரயில்வே போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
