தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம் விஜய்க்கு ஒரு பக்கம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் மறுபக்கம் தமிழக அரசியல் கணக்குகளையும் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியின் சதியும் காவல்துறையின் அலட்சியமும் காரணம் என்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியும், விஜய் தாமதமாக வந்ததே சம்பவத்திற்கு காரணம் என்று திமுக அரசும் மாறி மாறி குற்றம் சாட்டை வருகிறது.
இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் விஜய்க்கு எதிராக நிற்கும் நிலையில் பாஜக, அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்தை கையாண்ட விதம் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் மத்தியில் இடம் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. கரூர் விவகாரத்தில் விஜய் மீது விமர்சனம் வைப்பதை முற்றிலுமாக தவிர்த்து உள்ள இபிஎஸ் திமுக அரசின் அலட்சியம் தான் விபத்துக்கு காரணம் என்று அழுத்தமாக கூறி வருகிறார்.
அதே சமயம் விஜய் பக்கம் பாஜகவும் நெருங்குகிறது. தங்களுக்கு ஆதரவாக நின்ற அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதற்கு அச்சாரம் போடும் விதமாக விஜயுடன் கூட்டணி என்பதை ஈபிஎஸ் சமீபத்தில் மறைமுகமாக பேசி இருந்தார். இருந்தாலும் இதில் விஜயின் முடிவு என்ன என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் அதிமுக கூட்டணிக்கு விஜய் ஒருபோதும் செல்ல மாட்டார் என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். அதோ பாருங்கள் கொடி என தமிழக வெற்றி கழகம் கொடியை காண்பித்து இபிஎஸ் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டிய அவர், சொந்தக் கட்சிகாரர்களை (அதிமுகவினர்) அடுத்த கட்சியின் கொடியை பிடிக்க செய்யும் அவமானம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இபிஎஸ் இருக்கும் வரை விஜய் கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…