கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று (நவ., 18) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைகழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஏற்கனவே புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
