என்ஆர் காங்கிரஸ் கட்சி NDA கூட்டணியிலிருந்து விலகுவதாக பேச்சு எழுந்து வந்தது. இந்த நிலையில் தற்போது வரை NDA கூட்டணியில் தான் நீடிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், 2026 ஆம் வருட சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் எனவும் சூசகமாக பதில் அளித்துள்ளார். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து, நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
