தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், திருச்சி மாவட்ட நிர்வாகி ஒருவரின் பெயர் அடிபடுவது கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் தாலுகா அளவிலான பொறுப்புகளைப் பெறுவதற்கு விரும்புபவர்களிடம், நிர்வாகி அருள்ராஜ் என்பவர் சுமார் 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதனால், அருள்ராஜிற்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கக்கூடாது என வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.
அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற தொண்டர்களைப் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தியதால் வாயிலிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கனவே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துப் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு எதிராகத் திரண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகுதியானவர்களுக்குப் பதவி வழங்க வேண்டும் என்றும், பண பலம் கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என்றும் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2026 தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் தவெக-வில், மாவட்ட அளவிலான இந்தப் பதவிப் போட்டிகள் கட்சித் தலைமைக்குச் சவாலாக உருவெடுத்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட முடிவுகளைத் தொண்டர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…
தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முதன்மை இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்…
மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…
ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…
கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் டெல்லி மாநகராட்சியில் (MCD) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அனில் (27) என்ற வாலிபர்…