தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும், சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்திரன் கடந்த மாதம் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 15 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவீந்திரன் தற்போது பெயிலில் வெளிவந்திருக்கிறார்.
திடக்கழிவை எரிவாயுவாக மாற்றும் திட்டத்தில் சிம்புவின் ஈஸ்வரன் பட தயாரிப்பாளரான பாலாஜி முதலீடு செய்யும் வகையில் ரவீந்திரன் அணுகியதாகவும், அதனால் பாலாஜி கொடுத்த பணத்தில் ரவீந்திரன் படங்களை தயாரித்ததாகவும் பின்னர் தனது பணத்தை மோசடி செய்ததாகவும் ரவீந்திரன் மீது பாலாஜி புகார் அளித்திருந்தார். அதன் பெயரில் ரவீந்திரன் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளிவந்த ரவீந்திரன் முதன்முதலாக ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் பாலாஜிக்கு எதிராக தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும், அதை ஒவ்வொன்றையும் நான் வெளியிட்டு அவரின் முகத்திரையை கிழிப்பேன் என்று பேசியிருந்தார். அதை தொடர்ந்து அவருடைய மனைவியை பற்றியும் பேசினார். போலீஸ் வீட்டிற்கு அதிகாலை வந்ததும் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல அதை கேட்ட மகாலட்சுமி எல்லாத்தையும் நீங்க பாத்துக்கோங்க, எதுனாலும் எனக்கு கால் பண்ணுங்க என்று கூறிவிட்டு சூட்டிங் சென்று விட்டார். அந்த நேரத்திலும் அவர் தன்னால் புரொடக்ஷனில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக வேலைக்கு சென்று விட்டார். பின்னர் தன்னை கைது செய்து புழல் சிறையில் அடைத்த போது எனக்கு வெற்றிமாறன் படத்தில் வரும் ஜெயில் ஞாபகம் வந்தது.
215 ஏக்கர் நிலப்பரப்பில் ஜெயில் இவருடைய அறைக்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டுமாம். இவர் தனது வாழ்க்கையில் அவ்வளவு தூரம் நடந்ததே இல்லை என்று தெரிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் கழிவறையில் எப்படி உட்கார்ந்து எந்திரிக்க போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மனிதர் என்னை அழைத்து ஒரு வெஸ்டன் கழிவறையை காட்டினார்.
அதை பயன்படுத்திக் கொண்டேன். ஒருநாள் மகாலட்சுமியின் தன்னை பார்க்க வந்தார். அப்போது நொறுங்கிப் போய் விட்டேன். பலர் எங்கள் இருவரையும் பிரிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று சவால் விட்டு பேசினார்.
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டம் குமார்கண்டு ஒன்றிய பகுதியில், இரவு நேரத்தில் தன் காதலியைச் சந்திக்கச் சென்ற வாலிபரை அப்பகுதி…
ராய்ப்பூர் டீடீ நகர் பகுதியில் வீட்டின் வெளியே தனது குழந்தையைக் கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த நபர் மீது, அப்பகுதியில்…
டெஹ்ராடூனின் விஜய் காலனியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண், புதன்கிழமை அன்று நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்த…
அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…