Categories: சினிமா

மற்ற ஹீரோக்களுக்காக பணத்தைத் வாரியிறைத்த K T குஞ்சுமோன்.. சொந்த மகனுக்கு படமெடுத்த போது நடந்த துயரம்..

Spread the love

தமிழ் சினிமாவில் 90 களில் ஒரு புதிய போக்கு உருவாக ஆரம்பித்தது. படத்துக்கு மிக அதிகமாக செலவு செய்து பிரம்மாண்டமான படமாக எடுத்து அதை வெற்றிப்படமாக ஆக்குவது. இந்த வரிசையில் ஷங்கர், கதிர், பிரவீன் காந்த் போன்ற இயக்குனர்கள் அப்போது உருவானார்கள்.

அதே போல தயாரிப்பாளர் வரிசையில் பிரம்மாண்ட படங்கள் எடுப்பதில் முன்னணியில் இருந்தவர் கே டி குஞ்சுமோன். மலையாள சினிமாவை சேர்ந்தவரான குஞ்சுமோன், அங்கு சிறிய பட்ஜெட்டில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாகத் தயாரித்து வந்தார். தமிழில் வசந்தகால பறவை என்ற திரைப்படத்தை தயாரித்து அறிமுகமானார். அந்த படம் ஓடவில்லை என்றாலும் அடுத்து அதே இயக்குனர் பவித்ரன் இயக்கத்தில் சூரியன் என்ற படத்தை இயக்கினார்.

இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதனால் இந்த பிரம்மாண்ட பார்முலாவைக் கெட்டியாக பிடித்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் தயாரித்தவை எல்லாம் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள். ஜெண்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன் மற்றும் நிலவே வா ஆகிய படங்களை தயாரித்தார்.

இதையடுத்து தனது மகனைக் கதாநாயகனாக ஆக்கும் ஆசையில் அதுவரை இல்லாத பட்ஜெட்டில் கோடீஸ்வரன் என்ற படத்தை தயாரித்தார். பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து படத்தின் டிரைலர் மற்றும் சில பாடல்கள் கூட ரிலீஸாகின. ஆனால் படத்தின் மேல் ஏற்பட்ட அளவுக்கதிகமான கடன் காரணமாக அந்த படத்தை அவரால் கடைசி வரை ரிலீஸ் செய்யவே முடியவில்லை. அவரது மகனாலும் கதாநாயகன் ஆகமுடியவில்லை.

இந்த படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் அவரால் படமே தயாரிக்க முடியவில்லை. இப்போது தன்னுடைய ஹிட் படங்களில் ஒன்றான ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்த படம் அவரின் ரி எண்ட்ரியாக அமையுமா என்று ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்.

vinoth

Recent Posts

“நான் ஜான்.. ஜாலியாக இருக்க வந்திருக்கிறேன்”… குளியலறையில் பதுங்கியிருந்த மர்ம நபர்.. கதவைத் திறந்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

பிரிட்டனின் வால்சால் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது பர்மிங்காம்…

31 seconds ago

போக்குவரத்து நெரிசலால் டென்ஷன்… அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்…. வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!

மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…

5 minutes ago

விஜயை தப்பா கணக்கு போடுறீங்க… தளபதியின் நீச்சபங்க ராஜயோகம்…. ஜோதிடர் ஷெல்வி கணிப்பால் அதிர்ச்சி அரசியல் கட்சிகள்….!

தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…

13 minutes ago

மதுரைக்கு போக 31 ஆயிரமா?… பிளைட் டிக்கெட் விலையை கேட்டு மயக்கமே வந்துடும் போல.. விண்ணை முட்டும் டிக்கெட் விலையால் மக்கள் அதிர்ச்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…

16 minutes ago

கல்யாணத்திற்கு NO சொன்ன தாய்…. டிரம்மிற்குள் பிணமான 11 வயது மகன்…. மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…

19 minutes ago

BIG BREAKING: தமிழகத்தில் தேர்தல் நிறுத்தம்?…. கடைசி நேர பரபரப்பு…. சற்றுமுன் பதற்றம்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…

21 minutes ago