Categories: சினிமா

அந்தப் படத்துல தங்கர் பச்சான் செய்த அலப்பறை.. ஒரே நாள்ல 2.50 லட்சம் செலவு.. புலம்பி தள்ளிய பிரபல தயாரிப்பாளர்..!

Spread the love

தமிழ் சினிமாவில் பல அற்புதமான திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்து பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் தான் இயக்குனர் தங்கர்பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் மற்றும் அம்மாவின் கைபேசி போன்ற நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். இவருடைய படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இறுதியாக இவர் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிக்க கருமேகங்கள் கலைகின்றன என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இயக்குனராக மட்டுமல்லாமல் இவர் அதிக திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

இந்த நிலையில் தங்கர் பச்சான் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள இயக்குனர் பாலாஜி பிரபு, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்த சமயத்தில் தங்கர்பச்சான் நிறைய அலப்பறை செஞ்சுட்டாரு. படத்தின் பூஜை முதல் நாள் போடப்படுகிறது. அந்த சமயத்தில் வந்த தங்கர் பச்சான், ஏழு எட்டு குடிசைகளை போட்டு விட்டார், ஒரு பக்கம் பார்த்தா ஆடு மாடு எல்லாம் மேஞ்சுக்கிட்டு இருக்கு. மறுபக்கம் 15 கோழிகள் திரியுது. இன்னொரு பக்கம் பானையை தூக்கிட்டு வந்து வைக்கிறாங்க. மாட்டு சாணியை கொண்டுவந்து எல்லா இடத்திலும் போடுங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. தயாரிப்பாளர் நான்தான் ஆனா அவர் என்ன பண்றாருன்னு சுத்தமா எனக்கு புரியல.

அப்புறம் பார்த்தா, அப்பத்தா எல்லாம் ரெடியா என்று கேட்கிறார். திரும்பிப் பார்த்தா அஞ்சு பாட்டிங்க காதுல தொங்கட்டான தொங்க விட்டுகிட்டு வரிசையாக வந்தாங்க. அவங்க கிட்ட தங்கர்பச்சான், எல்லாரும் ஒவ்வொரு இடத்தில போய் நில்லுங்க ஒருத்தர் வாசல்ல நின்னு வாங்க அப்போ என்று கூப்பிடுங்கள் என்று இருக்காரு. முதல் நாள் பூஜை இல்லையே சூட்டிங் மாதிரி பண்ணிட்டாரு. அடுத்த நாள் செட் மேனேஜர் ஆபீஸ்க்கு வந்து நின்னு நேத்து செலவு மட்டும் 2.5 லட்சம் என்று சொன்னாரு.

என்னப்பா சொல்ற ஒரு நாளைக்கு இவ்வளவு செலவா என்று கேட்டதும், ஆமா சார் ஆடு மாடு எல்லாத்துக்கும் வாடகை அதுங்கள பாத்துக்க வந்த முதலாளிக்கும் பணம் அவங்களுக்கு வாங்கி கொடுத்த சாப்பாடு அது இல்லாம கூரை போட்டதற்கான பணம், அஞ்சு அப்பதாவுக்கும் ஆளுக்கு 5000 என்று அவர் கூறியது எனக்கு தூக்கி வாரி போட்டுருச்சு. தங்கர் பச்சான் செய்த அலப்பறையால் ஒரே நாளில் இரண்டு புள்ளி 50 லட்சம் ரூபாய் செலவுதான் ஆட்சி என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் புலம்பியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

1 மணத்தியாலம் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

1 மணத்தியாலம் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

4 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

4 மணத்தியாலங்கள் ago