கேப்டன் விஜயகாந்த்திற்கு நடந்ததை போல் வேறு யாருக்கும் நடக்காது என விஜயகாந்தை பற்றி நடிகை பிரியங்கா மோகன் உருக்கமாக செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நடிகை பிரியங்கா தமிழ், தெலுங்கு , கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். இவர் தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகர்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானவர்.அதனை தொடர்ந்து அவர் டான்,எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்தார்.
இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொடிருக்கிறது. இந்நிலையில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவியுடன் பிரதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே மாதம் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.இது ஒரு நகைச்சுவை என்று கூறப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான நேர்காணலில் நடிகை பிரியங்கா மோகன் மற்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களிடம் கேப்டன் விஜயகாந்தை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த இயக்குனர் எனக்கு தெறித்த முதல் ஆக்சன் ஹீரோ இவர்தான், இது மிகப்பெரிய இழப்பு என்றும் கூறினார். அதனை தொடர்ந்து பிரியங்கா மோகன் இவர் ரொம்ப நல்ல மனிதர், மக்களுக்கு உதவக்கூடிய மனம் கொண்டவர், இவரைப்போன்று இன்னொரு மனிதர் நமக்கு கிடைக்கபோவதில்லை என்றும் விஜயகாந்திற்கு நடந்த இறுதி ஊர்வலத்தைப்போல் வேறு யாருக்கும் நடக்காது என்று உருக்கமாக கூறினார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…