#image_title
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர் நடிகைகளுள் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது திரையுலக பயணத்தை தொடங்கி பின்பு சின்னத்திரை நடிகையாகி அதற்கு பின்பு வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமானவர்.
ஆரம்பத்தில் பிரியா பவானி சங்கர் தமிழ் செய்தி சேனல் ஆன புதிய தலைமுறையில் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக தனது திரையுலக கேரியரை தொடங்கினார். அதன் மூலம் நடிக்கும் வாய்ப்பை பெற்ற பிரியா பவானி சங்கர், விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடரான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் நாயகியாக நடித்தார். இந்த தொடர் மிகப் பிரபலமாக ஓடியது மற்றும் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் பிரியா பவானி சங்கர்.
அதிலிருந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற பிரியா பவானி சங்கர், 2017 ஆம் ஆண்டு ‘மேயாத மான்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானார். பின்னர் 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கத்தில்’ முக்கிய வேடத்தில் நடித்தார் பிரியா பவானி சங்கர். எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தில் நடித்தார்.
தொடர்ந்து ‘கசடதபற’, ஹரிஷ் கல்யாண்க்கு ஜோடியாக ‘ஓ மனப் பெண்ணே’ அருண் விஜய் உடன் இணைந்து ‘யானை’ அசோக் செல்வனுக்கு ஜோடியாக ‘ஹாஸ்டல்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘பத்து தல’, ‘ரத்னம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர்.
சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர். அடுத்ததாக ‘டிமான்டி காலனி 2’, ‘இந்தியன் 3’ போன்ற படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர் தன்னைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை பற்றி பேசியுள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால் இந்தியன் 2 படத்திற்கு பிறகு நிறைய பேர் என்னை ரொம்ப மோசமாக கலாய்க்கிறாங்க பேட் கமெண்ட்ஸ் பண்றாங்க. அவங்க கிட்ட தான் நான் ஒன்னே ஒன்னு தான் சொல்ல விரும்புகிறேன். ஒரு சங்கர் சார் கமல் சார் சேர்ந்து உருவாக்குற ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தில நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைக்குது அப்படின்னா சினிமால எந்த நடிகையும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க ஏன்னா எங்களுக்கு அது பெரிய விஷயம். அதே மாதிரி தான் கமல் சார் நடிக்கிற ஒரு படத்தில் எனக்கு ஒரு இடம் நடிக்கிறது கிடைத்தத நான் ரொம்ப பெருசா எடுத்து நான் நடிச்சேன். ஒருவேளை சினிமால உங்களுடைய எதிர்பார்ப்புகளை என்னால பூர்த்தி செய்ய முடியலன்னா அதுக்காக நான் சாரி சொல்லிக்கிறேன் என்று தனக்கு எதிர்மறையான விமர்சனங்களை கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…
சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…