தெலங்கானா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பீச்சுப்பள்ளி புஷ்கர் படித்துறைக்கு திடீரென கிருஷ்ணா நதியிலிருந்து முதலை ஒன்று கரை ஏறி வந்தது. இதைக் கண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். ஆனால், அங்கிருந்த கோயில் அர்ச்சகர் ஒருவர் அச்சப்படாமல், அந்த முதலையைத் தெய்வத்தின் அம்சமாகக் கருதி அதன் அருகில் சென்றார்.
அந்த அர்ச்சகர் முதலையின் நெற்றியில் பொட்டு வைத்து, மலர்களைத் தூவி, ஆரத்தி எடுத்து சிறப்புப் பூஜைகளைச் செய்தார். ஆபத்தான விலங்கு என்று கருதப்படும் முதலை, அர்ச்சகர் பூஜை செய்த அந்தச் சில நிமிடங்கள் எந்தவிதக் தாக்குதலும் நடத்தாமல் அமைதியாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தது அங்கே இருந்த பக்தர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த விசித்திரமான சம்பவத்தைப் படித்துறையில் இருந்த பக்தர்கள் சிலர் தங்களது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, அர்ச்சகரின் துணிச்சலையும் முதலையின் அமைதியான நடத்தையையும் கண்டு நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், அதே ஊரைச் சேர்ந்த…
தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…
சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…
தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…
வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…