தமிழக அரசியலில் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் கட்சி தேர்தல் அரசியலில் நுழைந்த காலத்திலிருந்தே அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல் கூட்டணி ஆட்சிக்கு இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் வலதுசாரி சக்திகள் வலுப்பெறுவதற்குத் தாங்கள் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டோம் என்பதில் விசிக உறுதியாக உள்ளது. எனவே, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு திமுக அரசுக்கு ‘ஆட்சியில் பங்கு’ கேட்டு எவ்வித அழுத்தமும் தரப்போவதில்லை என்று திருமாவளவன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இருப்பினும், இந்த நீண்டகாலக் கோரிக்கையைத் தாங்கள் கைவிடவில்லை என்றும், உரிய நேரத்தில் இதற்கான சூழல் கணியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மறுபுறம், காங்கிரஸ் கட்சி இக்கோரிக்கையை முன்வைப்பது அவர்களது உரிமை என்றும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் இதனைச் சுமூகமாகத் தீர்த்துக் கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘ஆட்சியில் பங்கு’ என்பது தமிழகத்திற்குத் தற்போது ஒத்துவராது என்று கூறியுள்ள நிலையில், கூட்டணியின் ஒற்றுமையைக் காப்பதே தற்போதைய முக்கிய நோக்கம் என்று திருமாவளவன் தனது பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அதன் படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு…
மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்திலுள்ள இட்மா நீர்வீழ்ச்சிக்கு விடுமுறை தினத்தைக் கொண்டாடச் சென்ற இளைஞர் ஒருவர், சமூக வலைதளங்களுக்காக 'ரீல்ஸ்'…
தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை 9:30 மணிக்கு மிக உற்சாகமாகத் தொடங்கியது. மக்கள் தீர்ப்பின்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
மத்தியப் பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், இன்று முதன்முறையாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார். புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று…