Categories: சினிமா

காதல் மனைவியுடன் வெளிநாட்டில் என்ஜாய் பண்ணும் பிரேம்ஜி.. அவரே வெளியிட்ட வீடியோ..!!

Spread the love

பிரேம்ஜி அமரன் கடந்த 1979-ஆம் ஆண்டு மிகப்பெரிய இசை குடும்பத்தில் பிறந்தார். இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி அமரன். இவருக்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்தது. வெளிநாடுகளுக்கும் சென்று பிரேம்ஜி இசை பயின்றுள்ளார். பல படங்களில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் வேலை பார்த்துள்ளார்.

இந்நிலையில் வல்லவன் திரைப்படத்தில் இடம் பெற்ற லூசு பெண்ணே, சென்னை 28 படத்தில் ஜல்சா, கோவா படத்தில் கோவா தீம் பாடல், மங்காத்தா திரைப்படத்தில் விளையாடு மங்காத்தா ஆகிய பல பாடல்களை பிரேம்ஜி ரீமிக்ஸ் செய்து சூப்பர் ஹிட் ஆக்கினார். கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஞாபகம் வருதே திரைப்படத்திற்கு பிரேம்ஜி தான் இசை அமைத்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீசான மன்மத லீலை திரைப்படத்திற்கு அவர்தான் இசையமைத்துள்ளார். இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ரிலீஸ் ஆன சத்திய சோதனை திரைப்படத்தில் பிரேம்ஜி ஹீரோவாக நடித்துள்ளார். இப்போது பிரேம்ஜிக்கு 45 வயது ஆகிறது. இந்த நிலையில் பிரேம்ஜிக்கும் ஈரோட்டைச் சேர்ந்த இந்து என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

சமீபத்தில் தான் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் பிரேம்ஜி தனது காதல் மனைவியுடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது மனைவி இந்துவுடன் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago