சுதந்திரதினத்தையொட்டி நேற்று இரவு, திருப்பூர் திருமுருகன் பூண்டி ரிங் ரோடு கே.வி.பி பள்ளி அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு வந்த ஆட்டோ ஒன்றில், பெண் ஒருவர் கதறி அழுவதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கோகிலா மற்றும் போலீசார் உடனே ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரதி என்பவருக்கு, பிரசவ வலி ஏற்பட்டு அவரது கணவர் அவரை அழைத்துக்கொண்டு இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். பாரதிக்கு பாதி குழந்தை வெளியே வந்த நிலையில், மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், குழந்தை பிறந்த விடும் என்பதால், நர்சிங் படித்திருந்த பெண் போலீஸ் கோகிலா, தைரியமாக ஆட்டோவில் வைத்தே பாரதிக்கு பிரசவம் பார்த்தார். பின் பாரதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில், இவர்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பாரதிக்கு பிரசவம் பார்த்து, அவரது உயிரை காப்பாற்றிய கோகிலாவை, போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக கோகிலா கூறுகையில், நர்சிங் படித்துள்ள நான் மருத்துவமனையில் பணியாற்றி பல பிரசவங்களை பார்த்து உள்ளேன். தமிழக காவல்துறை பணியில், சில மாதங்களுக்கு முன்பு தான் சேர்ந்தேன். ஏற்கனவே பிரசவம் பார்த்த அனுபவம் இருந்ததால், எந்தவித பயமின்றி பாரதிக்கு பிரசவம் பார்த்தேன். பாரதியும் குழந்தையும் நலமாக உள்ளனர், என்றார் கோகிலா.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…