#image_title
பிரபல நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் கர்ப்ப காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஏகப்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் எம்எஸ் விஜயபாஸ்கர். தமிழ் சினிமாவில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகளையும் பெற்றார்.
இவரது கெரியரில் சிவகாசி, மொழி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் குணச்சித்திர நடிகர் காமெடி நடிகராக வலம் வந்திருக்கின்றார். தற்பொழுது 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.
அதுமட்டுமில்லாமல் பற்பசை நிறுவனத்தில் விற்பனையாளராகவும், ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் முதல்வராகவும் பணியாற்றி இருக்கின்றார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வந்திருக்கின்றார். இவர் 1993ஆம் ஆண்டு ஷீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இதில் அவருடைய மகன் ஆதித்ய பாஸ்கர் சில படங்களில் நடித்திருக்கின்றார். இவரது மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் சில படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகின்றார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையின் தற்போது கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா பாஸ்கர் கர்ப்பகால போட்டோ சூட் எடுத்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…