தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில், நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் ஆளுநரின் செயல்பாட்டை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது “அருவருப்பானது” என்று அவர் சாடியுள்ளார். இது தொடர்பாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்களுக்குள் கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், விஜய்க்கு மக்கள் செல்வாக்கும் ஆதரவும் இருப்பதை அங்கீகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் இந்தத் தாமதம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை அவரது உரிமையை நிலைநாட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் முடிவுக்காகக் காத்திருக்கும் நிலையில், சக கலைஞரான பிரகாஷ் ராஜின் இந்த ஆதரவு குரல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…
மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…