#image_title
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி நிறைவடைந்தது. பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் களமிறங்கிய 23 போட்டியாளர்களில் முக்கிய போட்டிகளில் ஒருவராக பார்க்கப்பட்டவர் பிரதீப் ஆண்டனி. இவர் நடிகர் கவினின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனிக்கு ‘பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ‘ என்ற அவ பெயருடன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதற்கு முக்கிய காரணம் மாயாவும் அவருடன் இருந்தவர்களும் தான் இவர்கள் பிளான் போட்டு பிரதிப் ஆண்டனியை வெளியேற்றினர்.
கமலஹாசனும் ஒருதலை பட்சமாக செயல்பட்டு , தீர விசாரிக்காமல் ரெட் கேட் கொடுத்து அவரை வெளியேற்றினார். இதைத்தொடர்ந்து கமலஹாசனுக்கு எதிராக சோசியல் மீடியாவில் கண்டனங்கள் எழுந்தது. டைட்டில் வென்றிருந்தால் கூட பிரதீப் ஆண்டனி இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டார். அந்த அளவிற்கு தற்பொழுது அவருக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
இதுதொடர்பாக தற்பொழுது வரை அவர் எந்த பேட்டியும் அளிக்கவில்லை. இந்நிலையில் முதன்முறையாக பள்ளி ஆண்டு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார் பிரதீப் ஆண்டனி. அதில் பிரதீப்புக்கு ராஜ மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் உடன் பிரதீப் கெத்தாக நடந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அவருக்கு சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் கவுரவித்து உள்ளனர். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ வீடியோ…
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…