Categories: CINEMA

பூர்ணிமா அம்மா கிட்ட நான்.. கூலிக்கு மாறடிக்கிற கும்பல் எல்லாம்.. டென்ஷன் ஆன பிரதீப் வெளியிட்ட பதிவு..

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்நிகழ்ச்சி முடிவடையவுள்ள நிலையில், இந்த சீசனில் உள்ளவர்கள் மிகவும் பிரபலமாகி உள்ளனர். இந்த சீசனில் முதலில் பிரபலமானது என்றால் அது பிரதீப் ஆண்டனி தான். பிக்பாஸ் 5-வது சீசனில் பங்கேற்ற கவிணை, பிக் பாஸ் இல்லத்தில் சென்று கண்ணத்தில் அறைந்ததன் மூலம் மிகவும் பிரபலமான நிலையில், 7-வது சீசனில் பங்கேற்றார். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு வெளியில் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

#image_title

இடையே பெண் போட்டியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சக போட்டியாளர்கள் கருத்து தெரிவித்ததால், கமல் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காரணம், இந்த விவகாரத்தில் மற்றவர்களின் கருத்தை கேட்ட கமல், பிரதீப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வில்லை என பலரும் கமலுக்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். கமல் பிறந்தநாள் அன்று கமலுக்கு அவருக்கு வாழ்த்து சொன்ன பிரதீப், தீரவிசாரிப்பதே மெய் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டார்.

#image_title

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுப்பதற்கு முக்கியமாக பூர்ணிமா மற்றும் மயா தான் எனக் கூறி ரசிகர்கள் அவர்கள் மீது தங்களது வெறுப்பை உமிழத் தொடங்கினர். இந்த நிலையில் பூர்ணிமா 16 லட்சம் ரூபாயுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். எப்படியும் தான் டைட்டில் வெல்ல மாட்டோம் எனத் தெரிந்து அவர் பணத்துடன் வெளியேறி விட்டதாக சமூக வலைதளத்தில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

#image_title

இந்த நிலையில் இதனிடையே பூர்ணிமா வெளியேறிய நிலையில் பிரதீப் ரசிகர்கள் ரெட் கார்டு கொடுத்த அவருக்கு இது தேவை தான் என பிரதீப்பின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் நிலையில், இதை பார்க்க பூர்ணிமா ரசிகர்கள், கேரக்டர் அசாசினேஷன் கேம் பிரதீப் விளையாடியதாக மறுபக்கம் சாடி வந்தனர். இதனால் கடுப்பான பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில், “ பூர்ணிமா அம்மா கிட்ட வாக்கு கொடுத்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கேன். கூலிக்கு மாறு அடிக்குற கும்பல் லாம் இஷ்டத்துக்கு பேசி வாய் கெளறாதீங்க. நான் கேரக்டர் அசாசினேஷன் கேம்களை விளையாடுவதில்லை, அது என்னுடைய பாணி கிடையாது “ என பதிவிட்டுள்ளார்.

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

5 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

6 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

7 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

8 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

10 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

10 hours ago