இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் தங்களுடைய எதிர்காலம் பற்றிய அச்சம் இருக்கத்தான் செய்யும். எதிர்காலத்தில் குடும்ப செலவுகளை எப்படி நிர்வகிப்பது என்று இப்போதே பலரும் கவலைப்படுவார்கள். அப்படியான சூழலில் உங்கள் எதிர்காலத்திற்கு உங்களை தயார்படுத்தும் சில முதலீட்டு விருப்பங்கள் உள்ளது. அதில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மிக சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வரியில்லா வருமானமும் கிடைக்கும். இந்த திட்டம் அரசின் பாதுகாப்பான முதலீட்டை விருப்பம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது உத்திரவாதமான வருமானத்தை வழங்குவது மட்டுமல்லாமல் வரி சலுகைகளையும் வழங்குகின்றது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக ஒரு பெரிய தொகையை ஈட்டலாம். இது நீண்டகால முதலீட்டு சேமிப்பு திட்டமாகவும் இருக்கும். நீங்கள் இந்த திட்டத்தில் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் எளிதாக கணக்குத் திறக்கலாம். இந்த திட்டத்திற்கான முதலீட்டு வரம்பு 500 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் லாகின் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதற்குப் பிறகு உங்கள் வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் முதலீட்டை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இது முதலீட்டின் மீதான முழுமையான கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்குகின்றது. 15 வருடங்களுக்குப் பிறகு இந்த திட்டத்தில் இருந்து தொகையை திரும்ப பெற முடியுமா இல்லையா என்ற கேள்வி பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு வரும். PPF கணக்கிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நிதியாண்டில் ஒருமுறை பகுதி அளவு திரும்ப பெறுவதற்கான விருப்பமும் இதில் கிடைக்கும். இதனை தவிர புதிதாக முதலீடு செய்தாலும் செய்யாவிட்டாலும் 15 ஆண்டுகளுக்கு பின்னர் கணக்கை தொடர்ந்துகொள்ளும் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரை வரியில்லா வருமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ஏனென்றால் அதன் வட்டி மற்றும் முதிர்வு தொகை முற்றிலும் வரிவிலக்கு பெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 1.50 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இது 15 வருடங்களுக்கு தொடரும். அதனுடன் நீங்கள் ஏப்ரல் ஒன்று முதல் ஐந்தாம் தேதிக்கு இடையில் முதலீடு செய்வதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு முதலீடு செய்வதன் மூலமாக ஆண்டு முழுவதும் வட்டியின் அதிகபட்ச பலனை பெற முடியும். 15 வருடங்கள் முடிவடைந்த பிறகு கணக்கை ஐந்து வருடங்களுக்கு நீட்டித்து முதலீட்டை தொடரலாம். 7.1 சதவீத வட்டி விகிதத்தில் உங்கள் மாத வரி இல்லாத வருமானம் 1,34,295 ரூபாயாக இருக்கும். அதற்குப் பிறகு உங்களுடைய அசல் தொகை பாதுகாப்பாக இருக்கும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற வேண்டும் என்று விரும்பினால் உடனே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…