இனி நள்ளிரவு மின்வெட்டு இருக்காது?….. மின்வாரியம் கொடுத்த அந்த ஒரே வாக்குறுதி…. தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

Spread the love

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்துவரும் கோடை வெப்பத்தின் காரணமாக ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். சென்னை கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், ஆவடி போன்ற நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் 2 முதல் 4 மணி நேரம் வரை மின்சாரம் தடைபட்டதால் ஆத்திரமடைந்த மக்கள், வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறின.

திடீர் மின்தடையால் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் தூக்கமின்மையாலும், பெண்கள் வீட்டு வேலைகளை செய்ய முடியாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். மேலும், மின்வாரிய அலுவலகங்களை தொடர்புகொண்டால் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மின்தடை அதிகரித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். பிப்ரவரி முதல் ஜூன் வரை நிலவும் அதிக வெப்பத்தால் மின்தேவை உயர்ந்துள்ளதே இந்த தற்காலிக தடைய காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் சீரான மின் விநியோகத்தை உறுதிசெய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்காக கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இதன் பலனாக, நேற்று காலை முதல் மாநிலம் முழுவதும் மின் தட்டுப்பாடு ஏதுமின்றி சீரான விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும், நேற்று இரவு எங்கும் திட்டமிடப்படாத மின்தடை (unplanned outage) ஏற்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மின் தொகுப்பு மற்றும் விநியோக நிலையை 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்க தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, களப்பணியாளர்கள் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்து வருகின்றனர். மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago