“அமைச்சர் பதவி அவுட்”…. செங்கோட்டையனைத் தவிர மற்ற அனைவருக்கும் செக் வைத்த CM விஜய்…. உளவுத்துறை கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்….!

Spread the love

தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் வீழ்த்தி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். “ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தைத் தருவேன்” என்ற உறுதியான அறைகூவலுடன் ஆட்சியைப் பிடித்த முதல்வர் விஜய் மீது பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இருப்பினும், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தவிர, அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் புதியவர்கள் என்பதால், ஆட்சியின் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரையிலான நிர்வாகச் சவால்களைச் சமாளிப்பது அவருக்குக் கடுமையான சோதனையாக மாறியுள்ளது.

தனது தனிப்பட்ட செல்வாக்கால் வெற்றி பெற்று, அமைச்சர் பதவியைப் பெற்ற சிலர் தற்போது வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. மக்கள் மத்தியில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இத்தகைய நிர்வாகிகளின் போக்கால் முதல்வர் பெரும் வேதனையடைந்துள்ளார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, உளவுத்துறை மூலம் அமைச்சர்களின் செயல்பாடுகளை மிக தீவிரமாகக் கண்காணித்து வரும் அவர், தனிப்பட்ட பழக்கவழக்கங்களுக்காக ஆட்சி நிர்வாகத்தில் எந்தவிதச் சலுகையும் காட்டப்படாது என்று அமைச்சர்களுக்கு ஏற்கனவே காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் குற்றச்சாட்டுகள் குறைந்தபாடில்லை என்பதால், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் அதிரடி மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய சுமார் 8 அமைச்சர்களின் பதவிகள் வரும் செப்டம்பர் மாதத்தில் பறிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அவர்களுக்குப் பதிலாக விருதுநகர் செல்வம், வேலூர் வினோத் கண்ணன், திருப்பத்தூர் சீனிவாச சேதுபதி மற்றும் பவானிசாகர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோருக்குப் புதிய வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், பல அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றவும் அவர் முடிவு செய்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் சவால்கள் மற்றும் கூட்டணி தோழர்களின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியில் விஜய் உள்ளார். அதேநேரத்தில், முறைகேட்டில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி புகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தவறு செய்யும் அரசு அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை மாற்றம் மற்றும் துறைசார்ந்த அதிரடி நடவடிக்கைகளின் மூலம், தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்ய முதல்வர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 minutes ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

10 minutes ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

22 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

25 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

35 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

43 minutes ago